கிரெடிட் கார்டு என்னும் கடன் அட்டை என்பது  நிதி நிறுவனத்தால் வழங்கப்படும் ஒரு வகையான பிளாஸ்டிக் அட்டை ஆகும். இதன் மூலம் நீங்கள் பொருட்களை வாங்கலாம். கட்டணங்கள் செலுத்தலாம். பின்னர், அதனை குறுகிய காலத்தில் திரும்ப செலுத்தலாம். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் இது குறுகிய கால கடன வசதியை கொடுக்கிறது. இதில் உங்களுக்கான கடன் வரம்பு நிர்ணயிக்கப்பட்டு, அந்த வரம்பிற்குள் கடன் வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பணம் அல்லது டெபிட் கார்டு இல்லாமல் பொருட்களை வாங்க நீங்கள் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தும் போது, ​​கிரெடிட் கார்டு வழங்குநரிடமிருந்து நீங்கள் கடன் வாங்குவது போல் ஆகும்.  அதனை குறிப்பிட்ட காலத்திற்குள் வட்டியுடன் பின்னர் திருப்பிச் செலுத்துவது வழக்கம். உங்கள் கிரெடிட் கார்டு வரம்பை அறிந்து வைத்திருப்பது நிதி ஸ்திரத்தன்மைக்கு வழிவகுக்கிறது. உங்கள் வரம்பை விட குறைவாக செலவிடுவதன் மூலமும், சரியான நேரத்தில் உங்கள் பில்களை செலுத்துவதன் மூலமும், கிரெடிட் கார்டு வழங்கும் அனைத்து நன்மைகளையும் நீங்கள் நன்றாக அனுபவிக்க முடியும். உங்கள் கிரெடிட் கார்டுகளை பொறுப்புடன் பயன்படுத்தவும், ஏனெனில் கிரெடிட் கார்டுகளை சரியாகப் பயன்படுத்தப்படாவிட்டால் உங்களை  சிக்கலில் தள்ளிவிடும்.


கடன் வரம்பு எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது?


கடன் அட்டைக்காக நீங்கள் விண்ணப்பிக்கும் போது, அதனை வழங்கும் நிறுவனம்  பல்வேறு காரணிகளின் அடிப்படையில் உங்கள் கடன் வரம்பை அமைக்கிறது


கிரெடிட் ஹிஸ்டரி மற்றும் ஸ்கோர்: உங்களிடம் நல்ல கிரெடிட் ஹிஸ்டரி மற்றும் அதிக கிரெடிட் ஸ்கோர் இருந்தால், அதிக நெகிழ்வான மற்றும் எளிதான விதிமுறைகளுடன் கிரெடிட் வரம்பை பெறலாம்.


வருமானம் மற்றும் பொறுப்புகள்: உங்கள் திருப்பிச் செலுத்தும் திறன் சிறப்பாக இருந்தால், நீங்கள் அதிக கடன் வரம்பு அதிகம் பெற தகுதியுடையவராக இருப்பீர்கள்.


வயது மற்றும் பணி நிலை: உங்கள் வயது மற்றும் பணி நிலையும் கடன் வரம்பை நிர்ணயிப்பதில் ஒரு முக்கியமான காரணியாகும்.


கிரெடிட் வரம்பு உங்கள் கிரெடிட் ஸ்கோரை எவ்வாறு பாதிக்கிறது?


உங்கள் கடன் வரம்பு உங்கள் கிரெடிட் ஸ்கோரில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது உங்கள் கடன் தகுதியை பிரதிபலிக்கிறது. உங்கள் கிரெடிட் ஸ்கோரைப் பராமரிக்க அல்லது அதிகரிக்க, உங்களுக்கு கொடுக்கப்பட்ட கடன் வரம்பில் 30% க்கும் குறைவான அளவை பயன்படுத்துவது முக்கியம்.


கிரெடிட் கார்டு வரம்பை அதிகரிப்பது எப்படி?


1. உங்கள் கார்டை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துங்கள்: உங்கள் கிரெடிட் உபயோகத்தை சுமார் 30%  என்ற வகையில் பராமரித்தால், உங்கள் கார்டு நிலுவையை தவறாமல் செலுத்துவதன் மூலம் உங்கள் ஸ்கொரை அதிகரிக்கலாம். 


2. பில்களை சரியான நேரத்தில் செலுத்துங்கள்: நீங்கள் சரியான நேரத்தில் நிலுவை தொகையை தவறாமல் செலுத்தினால் வங்கிகள் உங்கள் வரம்பை படிப்படியாக அதிகரிக்கும்.


3. கடன் வரம்பை அதிகரிக்க கோரிக்கை: உங்கள் கிரெடிட் அகார்டை தவறாமல் குறித்த சேரத்தில் சரியாக செலுத்தும் நிலையில், வங்கிக்குச் சென்று உங்கள் கடன் வரம்பைக் கோருங்கள். 


4. அதிக வருமானம்: உங்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும் நிலையில், பல கிரெட் கார்ட் வழங்குநர்கள் உங்கள் கோரிக்கைகளை உடனே அங்கீகரிப்பார்கள்.


மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு ரயில் டிக்கெட் கட்டணத்தில் சலுகையா? நாடாளுமன்றத்தில் விளக்கிய ரயில்வே அமைச்சர்


அதிக கடன் வரம்பின் நன்மைகள்


1. சிறந்த கடன் பயன்பாட்டு விகிதம்: உங்கள் கடன் வரம்பு அதிகரிக்கும் போது, ​​உங்கள் கடன் பயன்பாட்டு விகிதம் குறைகிறது. அதாவது கொடுக்கபப்ட்ட கடன் வரம்பில், குறைவாக பயன்படுத்தும் வாய்ப்பு அதிகரிக்கும். இது உங்கள் கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்துகிறது. 


2. அவசர உதவி: மருத்துவ அல்லது நிதி அவசரநிலை ஏற்படும் போது மேம்படுத்தப்பட்ட வரம்பு, உங்களுக்கு கை கொடுக்கும் சிறந்த உதவிக் கரமாக செயல்படுகிறது.


3. சிறப்பு சலுகைகள்: சில நேரங்களில், அதிக வரம்புகளைக் கொண்ட கிரெடிட் கார்டுகள் சிறந்த வெகுமதிகள், கேஷ்பேக் ஒப்பந்தங்கள் மற்றும் பிற நன்மைகளுடன் வருகின்றன.


4. கடனுக்கான எளிதான ஒப்புதல்: அதிக கடன் வரம்புகள் மற்றும் குறைந்த பயன்பாட்டு விகிதங்கள், மூலம் உஙக்ள் மீதான நம்பிக்கை அதிகரிப்பதால், கடன் எளிதில் கிடைக்கும்


மேலும் படிக்க | EPFO RULE: ஓய்வூதிய பலன் பாதிக்காமல்... PF கணக்கில் இருந்து பணம் எடுப்பது எப்படி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ