திருப்பதி: அங்கப்பிரதட்சணம் செய்ய ஆன்லைன் டிக்கெட் ரிலீஸ்..! உடனே புக் பண்ணுங்க
திருப்பதி திருமலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய விரும்பும் பக்தர்களுக்கான டிக்கெட் ஆன்லைனில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. விரும்பும் பக்தர்கள் கட்டணம் ஏதுமின்றி இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
திருப்பதி திருமலையில் இருக்கும் ஏழுமலையானை தரிசக்க நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவர்கள் தங்கள் வசதிக்காக ஆன்லைன் வழியாகவே சிறப்பு தரிசன டிக்கெட் முதல் தங்கும் விடுதிகள் வரை ஆன்லைனிலேயே புக்கிங் செய்து கொள்ள முடியும். இலவச தரிசனத்தில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டும் என்பதால் குடும்பத்துடன் திருப்பதி செல்லும் பக்தர்கள் ஆன்லைனில் டிக்கெட் புக்கிங் செய்து குறிப்பிட்ட நேரத்துக்கு சரியாக சென்று சாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க | சூரியன்-சனி சேர்க்கை: இந்த ராசிகளுக்கு இக்கட்டான நேரம், அதிக எச்சரிக்கை தேவை!!
அங்கப்பிரதட்சணம்
இதேபோல் கோயில் பிரகாரத்தில் அங்கப்பிரதட்சணமும் விரும்பும் பக்தர்கள் செய்யலாம். தங்கள் வேண்டுதல் நிறைவேறக்கோரியும், நிறைவேறிய வேண்டுதலுக்கும் ஏராளமான பக்தர்கள் திருப்பதி கோயிலில் அங்கப்பிரதட்சணம் செய்கின்றனர். ஆனால், இதற்கான டிக்கெட் நேரில் மட்டுமே வழங்கப்பட்டது. சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக பக்தர்கள் வரிசையில் நின்று டிக்கெட் வாங்க வேண்டிய சூழல் இருந்தது. கொரோனா காலத்தில் அங்கப்பிரதட்சணம் முழுமையாக ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் இந்த சேவை தொடங்கியுள்ளது. ஆனால், பக்தர்கள் ஆன்லைனில் டிக்கெட் பெற்றுக் கொள்ள வேண்டும்.
ஆன்லைனில் டிக்கெட் வெளியீடு
திருப்பதி தேவஸ்தானத்தின் www.tirupatibalaji.gov.in இணையத்தில் சென்று அங்கப்பிரதட்சணம் செய்வதற்கான டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பிப்வரி 11 ஆம் தேதி காலை அங்கப்பிரதட்சண டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது. இம்மாதம் 23ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை அங்கப்பிரதட்சணம் செய்ய விரும்பும் பக்தர்கள், தேவையான டிக்கெட்டுகளை இலவசமாக ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ