300 ரூபாய் டிக்கெட் 3,000 ரூபாய்; பதறிய திருப்பதி தேவஸ்தானம்

திருப்பதியில் போலி தரிசன டிக்கெட்களை அதிக விலைக்கு விற்ற விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tirumala Tirupati: திருப்பதி வெங்கடாஜலபதி ஆலயம் உலகப் புகழ் பெற்றது. திருப்பதி பெருமாள் தான் உலகிலேயே மிகவும் பணக்காரக் கடவுள் என்ற பெருமை பெற்றவர். இக்கோவிலுக்கு இந்தியா மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் வருவர்.
இத்தலம் வைணவர்களின் 108 திவ்விய தேசங்கள் என்றழைக்கப்படும் கோவில்களில் திருவரங்கத்திற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் வைத்துக் கொண்டாடப்படுகிறது. இந்த பகுதியில் திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுள்ள திருமலையும், அருள்மிகு பத்மாவதி தாயார் கோயில் கொண்டுள்ள திருப்பதியும் இரு நகரங்களாக விளங்கினாலும் பொதுவில் திருப்பதி (TTD) என்றே பக்தர்களால் போற்றப்படுகிறது. திருமலை மேல்திருப்பதி என்றும் மற்றது கீழ் திருப்பதியெனவும் குறிப்பிடப்படுகிறது.
ALSO READ | காவாளம்: திருப்பதி உண்டியல் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள்
இத்தகைய பிரசித்தப்பெற்ற இக்கோவிலில் சமீப காலமாக கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு தேவஸ்தான நிர்வாகம் தடை விதித்து இருந்தது. அதன்படி திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்ய 300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் விற்கப்படுகிறது. இதனை தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம்.
இந்த நிலையில் தற்போது ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனத்திற்கு டிக்கெட்கள் கிடைக்காமல் வழியில் கிடைக்கும் போலி டிக்கெட்களை நம்பி ஏமாறும் சூழல் அவ்வப்போது நிகழ்கிறது. அதன்படி ஆங்கிலப் புத்தாண்டு தினத்தை ஒட்டி தெலங்கானாவில் இருந்து 4 பக்தர்கள் திருமலைக்கு வந்துள்ளனர். அவர்கள் அளித்த 300 ரூபாய் டிக்கெட்டை தேவஸ்தான ஊழியர்கள் ஸ்கேன் செய்து பார்த்த போது, அவை போலியானவை என்று தெரியவந்தது. அதேபோல் மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருந்து வந்திருந்த 3 பக்தர்கள் கொண்டு வந்ததும் போலி தரிசன டிக்கெட்கள் என்று கண்டறியப்பட்டது.
இவர்கள் 300 ரூபாய் தரிசன டிக்கெட்டை 3 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியுள்ளனர். இவ்வாறு 21 ஆயிரம் ரூபாய் அளவிற்கு மோசடி நடந்துள்ளது. இதுதொடர்பாக விஜிலென்ஸ் அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இந்த விசாரணை முடிவில் 7 பேரையும் கைது செய்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது.,
திருப்பதி ஏழுமலையான் கோயிலின் tirupatibalaji.ap.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். போலி டிக்கெட் விற்பவர்கள் மீது கண்டிப்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ALSO READ | TTD: திருப்பதிக்கு காணிக்கையாக கிடைத்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் நிலை என்ன
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR