சென்னை: டிஎன்பிஎஸ்சி க்ரூப் 5 தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியானது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள குரூப் 5ஏ தேர்வுக்கு ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் செப்டம்பர் 21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தின் இணையதளம் www.tnpsc.gov.in ஆகும். தகுதியும், அரசுப் பணி செய்ய விரும்புபவர்களும் இந்த இணையதளத்தின் மூலம் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தலைமைச் செயலகத்தின் பிரிவு அலுவலர், உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள 161 இடங்களில் பணியமர்த்தப்படுவார்கள் என்று தேர்வாணையத்தின் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காலியிட விவரங்கள்:


டிஎன்பிஎஸ்சி க்ரூப் 5 தேர்வுக்கான அறிவிக்கையில், தலைமைச் செயலகத்தில் சட்டம் மற்றும் நிதி சாராத பிரிவு உதவி அலுவலர் பதவிகளுக்கு 74 காலியிடங்கள் உள்ளன. நிதிப்பிரிவு உதவி அலுவலர் பதவிக்கு 29 இடங்கள் காலியாக உள்ளன. இதைத்தவிர, சட்டம் மற்றும் நிதிசாரா உதவியாளர் பதவிக்கான 49 மற்றும் நிதி உதவியாளர் பதவிக்கான 9 காலியிடங்களும் இந்த ஆட்சேர்ப்பு நடைமுறை மூலம் நிரப்பப்படும்.


மேலும் படிக்க | TNPSC வேலைவாய்ப்பு: தமிழக அரசில் பல்வேறு பணிகளுக்கான ஆட்சேர்ப்பு நடைமுறை தொடங்கியது


இந்தக் காலிப் பணியிடங்களுக்கான நியமனம் தமிழக இட ஒதுக்கீடு விதிகளின்படி ஒதுக்கீடு செய்யப்படும். சட்டம் மற்றும் நிதிசாரா பிரிவு உதவி அலுவலர் பதவிகளுக்கும், நிதிப் பிரிவு உதவி அலுவலர் பணிக்கும் வயது வரம்பு 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 


பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கான சம்பள விவரம்



பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு வயது உச்ச வரம்பு 40 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதேபோல, சட்டம் மற்றும் நிதிசாரா பிரிவு உதவி அலுவலர் பதவிகளுக்கும், நிதிப் பிரிவு உதவி அலுவலர் பணிக்கும் வயது வரம்பு 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு வயது உச்ச வரம்பு 35 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | மருந்தாளுநர் பணிக்கான வாய்ப்பு! உடனே விண்ணப்பிக்கவும்


சட்டம் மற்றும் நிதிசாரா பிரிவு உதவி அலுவலர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். அதோடு, தமிழக அரசில் இளநிலை உதவியாளர், தமிழ்நாடு அமைச்சக சேவை அல்லது தமிழ்நாடு நீதித்துறை பணி ஆகியவற்றில் வழங்கப்பட்ட சேவைகளை உள்ளடக்கிய உதவியாளர் பிரிவில் மூன்றாண்டு பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.


நிதிப் பிரிவு உதவி அலுவலர் பணிக்கு, வணிகம், பொருளாதாரம், புள்ளியல் துறைகளில் ஏதேனும் ஒன்றில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதோடு, தமிழக அரசில் இளநிலை உதவியாளர், தமிழ்நாடு அமைச்சக சேவை அல்லது தமிழ்நாடு நீதித்துறை பணி ஆகியவற்றில் வழங்கப்பட்ட சேவைகளை உள்ளடக்கிய உதவியாளர் பிரிவில் மூன்றாண்டு பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.


மேலும் படிக்க | வங்கியில் இருந்து கடனை மற்றொரு வங்கிக்கு மாற்றுவது இவ்வளவு சுலபமா? 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ