தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாய்ப்பு
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் டிப்ளோமோ படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Graduate and Diploma Apprentices பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். தகுதியான விண்ணப்பதாரர்கள் மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
TNSTC காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Graduate and Diploma Apprentices பணிக்கென மொத்தம் 346 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கிறது.
Apprentice கல்வி தகுதி:
Graduate Apprentices – அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Engineering Degree, Graduate (First Class) தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்
Diploma Apprentices – அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Diploma in Engineering or technology தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்
TNSTC வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Apprentice ஊதியம்;
தேர்வ செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியம் வழங்கப்படும். Graduate Apprentice – ரூ.9,000/-, Diploma Apprentice – ரூ.8,000/-
TNSTC தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை நிரப்பி, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 18.12.2022 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் படிக்க | ரயில்வேயில் வேலை வாய்ப்பு! விண்ணப்ப கட்டணம் இல்லை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ