கோடை காலம் வரப்போகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், குளிரூட்டி, ஃப்ரிட்ஜ், ஏசி உள்ளிட்ட கனரக எலக்ட்ரானிக் கருவிகள் தொடர்ந்து இயங்குவதால், மின்சார பில் ஷாக் அடிக்கும். ஏற்கனவே மின் கட்டணங்கள் வேறு அதிகரிக்கப்பட்டிருக்கும் நிலையில், கரண்ட் பில்  அதிர்ச்சியைக் கொடுக்கும் என்றால் மிகையில்லை.  அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் பணத்தை மிச்சப்படுத்த  விரும்பினால், வீட்டின் கூரையில் சோலார் பேனல்களை பொறுத்தவும். இது உங்கள் பணத்தை மிச்சப்படுத்துவது மட்டுமல்லாமல் சுற்றுச்சூழலுக்கும் பங்களிக்கும். சோலார் பேனல்கள் அமைக்க மத்திய அரசு மானிய பணம் தருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பசுமை எரிசக்தியை ஊக்குவிக்க மத்திய அரசு விரும்புகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் இந்தத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இதன் கீழ் சோலார் பேனல்கள் அமைக்க அரசு மானியம் வழங்கி வருகிறது. நீங்கள் சோலார் பேனல்களை நிறுவ விரும்பினால், இதற்கு முதலில் உங்கள் மின்சார நுகர்வை மதிப்பிட வேண்டும். உங்கள் வீட்டில் ஒரு நாளைக்கு எத்தனை யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது என்பதை அறிந்து கொண்டு,. அதன்படி உங்கள் வீட்டில் சோலார் பேனல் பொருத்தப்படும்.


மேலும் படிக்க |வருமான வரி செலுத்துவோருக்கு முக்கிய செய்தி: இந்த படிவங்கள் முக்கியம்!!


மின்சார தேவை


உங்கள் வீட்டில் 3-4 மின் விசிறிகள், ஒரு குளிர்சாதனப்பெட்டி, 6-7 LED விளக்குகள், தண்ணீர் மோட்டார் மற்றும் இயங்கும் டிவி போன்ற சாதனங்கள் உள்ளன என்று வைத்துக் கொள்வோம். எனவே இதற்காக தினமும் 6-8 யூனிட் வரை மின்சாரம் செலவிட வேண்டியிருக்கும். இரண்டு கிலோவாட் சோலார் பேனல் உங்களது இந்த தேவையை பூர்த்தி செய்யும். ஏனெனில் இரண்டு கிலோவாட் சோலார் பேனல் ஒவ்வொரு நாளும் 6-8 யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும். தற்போது மோனோபார்க் பைஃபேஷியல் தொழில்நுட்பத்தின் சோலார் பேனல்கள் வரவுள்ளன. இது முன் மற்றும் பின்புறம் இரண்டிலும் சக்தியை உருவாக்குகிறது.


சோலார் பேனல் அமைக்க ஆகும் செலவு


2 கிலோவாட் சோலார் பேனல் அமைக்க, 40% மானியம் கிடைக்கும். இதன் விலை 1 லட்சத்து 20 ஆயிரம் ஆனால் மானியத்திற்கு பிறகு 72 ஆயிரம் ரூபாய் செலவழிக்க வேண்டும். இதில் உங்களுக்கு அரசிடமிருந்து ரூ.48,000 தள்ளுபடி வழங்கப்படும். மறுபுறம், 500 KV வரை சோலார் கூரை நிறுவப்பட்டால், அதில் மத்திய அரசு 20% மானியம் வழங்கும். சோலார் பேனலின் ஆயுட்காலம் 25 ஆண்டுகள் ஆகும். அத்தகைய சூழ்நிலையில், சோலார் பேனலை நிறுவுவதன் மூலம், நீங்கள் நீண்ட காலத்திற்கு மின் கட்டணத்திலிருந்து விடுபடலாம்.


மேலும் படிக்க: வங்கிகளில் எவ்வளவு மினிமம் பேலன்ஸ் வைக்க வேண்டும்... அபராதம் எவ்வளவு? - முழு விவரம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ