வீண் என வீசியெறியும் குப்பைகளை கண்கவர் கலை பொருட்களாக மாற்றி வருகின்றார் மங்களூருவை சேர்த மேகா...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நம் அன்றாட வாழ்வில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க அரசு எத்துனை தடைகளையும் கொண்டு வந்தாலாம் தடைகளை மீறி அதன் பயன்பாடு மிகவும் பரவலாக உள்ளது. பயன்பாட்டின் போது ஏற்படும் பாதிப்பை விட பிளாஸ்டிக் பொருட்களை அகற்றும் போது ஏற்படும் பாதிப்புகள் மிக அதிகமாகவே உள்ளது.


இந்நிலையில் பிளாஸ்டிக் பொருட்களின் பாதிப்பை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கர்நாடக மாநிலம் மங்களூரு பகுதியை சேர்ந்த மேகா மெண்டன் என்ற இளம் கலைஞர்., அவரது தனித்துவமான வழியில் நிலையான தன்மையை ஊக்குவிப்பதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளார்.


அந்த வகையில் சுற்றுச்சூழல் சுத்தமாக வைத்திருப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகைல் 5 நாள் சிறப்பு கலை கண்காட்சியினை மாணவர்களுக்கு அறிமுகம் செய்து வருகின்றார்.


நம் அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தி தூக்கி எறியும் சில பொருட்களை கொண்டு உருவாக்கப்பட்ட கலைப்படைப்புகள் இந்த  கண்காட்சியில் இடம்பெறுகின்றன. இந்த சிறப்பு கண்காட்சியில் இடம்பெறும் ஒவ்வொரு பொருளும் ஒரு சிறந்த மற்றும் ஆக்கப்பூர்வமான வழியில் பயன்படுத்தப்படலாம் என்பதையும் அவர் எடுத்து காட்டுகிறார்.


3 நாட்களுக்கு முன்பு நடைப்பெற்ற இந்த கண்காட்சியில், சுமார் 200 மறுசுழற்சி செய்யப்பட்ட பாட்டில்கள் காட்சிப்படுத்த பட்டன. இந்த சிறப்பு முகாமில் மேகாவுடன் கூடுதலாக 28 பேர் (குழந்தைகள் மற்றும் பெண்கள்) பங்கேற்றனர்.



மேகாவின் இந்த முயற்சி குறித்து அவர் ANI செய்தி நிறுவனத்திற்கு தெரிவிக்கையில் "தண்ணீர்பாவி கடற்கரைக்கு சென்று அங்கு வீணாக வீசப்பட்ட பாட்டில்களை சேகரித்தோம். பின்னர் அந்த பாட்டில்களை வண்ணப்பூச்சுக்கள் கொண்டு அளங்கரித்தோம்., அதனுல் ஒளிரும் மின்விளக்குகளை இட்டை அழகு படுத்தினோம். இந்த முயற்சியில் என்னுடன் குழ்தைகள், இல்லத்தரசிகள் என 28 பேர் பங்கேற்று எனக்கு உதவினர். எங்களின் நோக்கம் வீண் என வீசி எறியும் பொருட்களை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்பதும், அதவேளையில் கடற்கரையினை சுத்தமாக்க வேண்டும் என்பதும் தான். இந்த செயல்பாட்டினால் பிளாஸ்டிக் பொருட்களின் மீதான ஈர்ப்பு மக்களின் மத்தியில் குறையும் என நம்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.



மேகா-வின் முயற்சியால் தற்போது அவரை சுற்றி இருக்கும் குழந்தைகளும் வளரும் கலைஞர்களாக உருவெடுத்துள்ளனர். அவரின் முயற்சிக்கு பாராட்டுகள்...