டெல்லி புராரியில் 11 பேர் தற்கொலை செய்து கொண்ட வீட்டில் வளர்ந்த செல்ல நாய் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாட்டையே உலுக்கச் செய்த புராரி கூட்டுத் தற்கொலை மரணத்தை அத்தனை எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தங்களது வீட்டின் உள்முற்றத்தில் அமைக்கப்பட்ட கிரில் கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.


அந்த கூட்டுத் தற்கொலையில் தற்கொலை செய்து கொண்ட குடும்ப உறுப்பினர்கள் தங்களது வளர்ப்பு நாய் டாமியை மட்டும் தங்களது தற்கொலையில் கூட்டு சேர்த்துக் கொள்ளவில்லை. அவர்கள் தூக்கில் தொங்கிய கிரில் கம்பியில் தான் வீட்டின் அந்த நாயும் கட்டப்பட்டு இருந்தது. நாயை மீட்ட போது அதற்கு காய்ச்சல் இருந்தது. 


இதை அடுத்து அந்த நாய் காப்பகத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தது. தம்மை வளர்த்தவர்கள் உடன் இல்லையே என்ற கவலை மற்றும் மன அழுத்தத்திலேயே நாய் காணப்பட்டதாக கூறப்படுகிறது.


இந்நிலையில் நேற்று திடீரென ஏற்பட்ட இதய அடைப்பு (கார்டியாக் அரெஸ்ட்) காரணமாக டாமி இறந்து விட்டதாகத் தகவல் வெளியானது.