டூர் போனா செலவாகும்னு பயமா... சிக்கனமா டிராவல் பண்ண இந்த டிப்ஸ்களை படிங்க!
Travelling Tips: நண்பர்களாக சேர்ந்து சுற்றுலா செல்லும்போது இந்த டிப்ஸ்களை நினைவில் வைத்துக்கொள்வதன் மூலம் உங்களின் பெருவாரியான தேவையற்ற செலவுகளை குறைக்கலாம்.
Travelling Tips: நவம்பர், டிசம்பர் மாதங்களில் இந்தியாவின் பல பகுதிகளில் தட்பவெப்பம் நல்ல குளிர்ச்சியாக இருக்கும். எனவே, இந்த காலகட்டங்களில்தான் பலரும் சுற்றுலா செல்ல விருப்பப்படுவார்கள். மலைப்பிரதேசங்கள், பிரபல சுற்றுலா தளங்கள் ஆகிய பகுதிகளில் இந்த காலகட்டங்களில் மக்கள் கூட்டமும் அதிகமாக இருக்கும்.
அதுவும் பிரண்ட்ஸ் கேங்கில் ஒருவர் சுற்றுலா செல்ல கோவா பிளானை தூசித் தட்டினால் பலரும் அதற்கு விருப்பம் தெரிவிப்பார்கள். ஆனால் அந்த கேங்கில் முக்கிய நபர்களில் ஒருவர் நிச்சயம் அந்த பிளானை தட்டிக்கழிப்பார். காரணம் கேட்டால் பெரும்பாலும் காசு இல்லை என்பார்கள், செலவு அதிகமாகும் என சொல்வார்கள். டூர் போனால் செலவு வரும் தானே நீங்களும் அவரை கேட்பீர்கள், ஆனால், 'டூருக்கு நா வரல, நீங்க வேணா போங்க' என டெம்பிளேட் பதிலை ரெடியாக வைத்திருப்பார். எத்தனை முறை கேட்டாலும், எத்தனை இடங்களை மாற்றினாலும் அந்த டெம்பிளேட் மட்டும் மாறவே மாறாது.
சிக்கனமா டிராவல் பண்ண 5 டிப்ஸ்கள்
ஆனால், நாங்கள் சொல்லும் இந்த 5 டிப்ஸ்களை பின்பற்றினால் நீங்கள் சுற்றுலா செல்லும் இடத்தில் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். நீங்கள் விரும்பும் பட்ஜெட்டிலேயே அந்த டூரை நீங்கள் முடித்துவிடலாம். அங்கு செல்லும் போக்குவரத்து முதல் அங்கு உங்களுக்காகும் அனைத்து செலவுகளின் போதும் இந்த டிப்ஸை நீங்கள் மனதில் வைத்து பின்பற்ற வேண்டும்.
- நீங்கள் எங்கு சென்றாலும் அங்கு உங்களின் பட்ஜெட்டுக்கு ஏற்ற தங்குமிடங்களை முன்கூட்டியே தேர்வு செய்து அதனை முன்பதிவு செய்து வைத்துக்கொள்ளுங்கள். டூர் போன இடத்தில் ரூம் புக் செய்துகொள்வோம் என நினைத்தால் கடைசி நேரத்தில் கட்டணம் அதிகமாகலாம். ரூம் மட்டுமில்லை சுற்றுலா தலங்களில் முன்பதிவுக்கு வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் நீங்கள் முன்பதிவு செய்துகொள்வது நல்லதாகும்.
- அதேபோல், அங்கு கிடைக்கும் உள்ளூர் உணவுகளை கொண்ட உணவகங்களில் உண்ணுங்கள். அப்போதுதான் செலவும் குறைவாக இருக்கும், நீங்கள் நினைக்கக் கூடிய வகையிலும் சாப்பிட முடியும். சைவமோ, அசைவமோ பிடித்த உணவுகளை முடிந்தளவிற்கு ஆர்டர் செய்து சாப்பிடுங்கள், தேவையில்லாமல் வாங்கி குவிப்பதை தவிருங்கள். இது பணத்திற்காக மட்டுமில்லை, உணவுகளை வீணாக்காமல் இருக்கும் நோக்கிலும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
- முடிந்தளவிற்கு நீங்கள் சுற்றுலா செல்லும் இடத்திற்கு பேருந்து, ரயில் போன்ற பொது போக்குவரத்தை பயன்படுத்த பாருங்கள். தனி வாகனங்களில் பயணிக்கும் போது நிச்சயம் அதற்கான செலவு, கவனிப்பு போன்றவை கூடுதலாக இருக்கும்.
- சுற்றுலா சென்ற உடன் அங்கு இருக்கும் உள்ளூர் மக்களிடம் பேசி உங்களின் செலவை குறைக்க எடுக்க வேண்டிய வழிமுறைகளை கேட்கலாம். உதாரணத்திற்கு, சென்னை சென்ட்ரலில் இருந்து வண்டலூர் போக வேண்டும் என்றால் பேருந்தில் செல்லலாமா அல்லது மின்சார ரயிலில் செல்லலாமா என்பதை உள்ளூர் மக்களிடம் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும். இரண்டில் எதில் பயண நேரம் அதிகம், பயண கட்டணம் அதிகம் ஆகியவற்றை தெரிந்துகொண்டு தேவைக்கேற்ப பயன்படுத்தலாம்.
- உங்களின் பட்ஜெட் எவ்வளவு என்பதை முன்னரே தீர்மானித்துக்கொண்டு அதற்குள் செலவு செய்ய பாருங்கள். 5000 ரூபாய் பட்ஜெட் என்றால் 4500 செலவு செய்ய பாருங்கள். அந்த 500 ரூபாய் அவசரத் தேவைக்காக இருக்க வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ