பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்து, பல நாட்களாக பலரது உள்ளங்களை கொள்ளை கொண்டவர் த்ரிஷா. பொன்னியின் செல்வன் படத்தின் ஒவ்வொரு ப்ரமோஷன் நிகழ்ச்சியிலும் ஒவ்வொரு விதமாக அழகில் தோன்றி அனைவரையும் ஈர்த்தவர் இவர். அந்த அழகிற்கான ரகசியம் தெரியுமா உங்களுக்கு. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தினசரி உடற்பயிற்சி:


த்ரிஷா, தினசரி உடற்பயிற்சியை மிகவும் கண்ணும் கருத்துமாக ஃபாலோ செய்கிறார். அது மட்டுமன்றி, உடலை கட்டுக்காேப்பாக வைத்திருக்க டயட்டையும் மேற்கொள்கிறார். துரித உணவுகளை அரவே தவிற்ப்பவராம் த்ரிஷா. இவ்வளவு ஏன்? படப்பிடிப்பில் கூட, தனக்கான உணவினை வீட்டிலிருந்தே த்ரிஷா கொண்டு வந்து விடுவதாக கூறப்படுகிறது. ஒரு கப் க்ரீ்ன் டீ அல்லது சிறிதளவு எலுமிச்சை சாறு கலக்கிய ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீருடன்தான் தனது நாளையே துவக்குவாராம், த்ரிஷா. 


மேலும் படிக்க | Actor Vikram: ஆதித்த கரிகாலனுக்கு அடங்காத வெறி..வாளுடன் போட்டோஷூட் செய்த சியான்!


த்ரிஷாவின் டயட்டில் உள்ள பழங்கள்:


நம்முடைய டயட் சாட்டில் அதிகளவு காய்கறிகளும் பழங்களும்தான் இருக்க வேண்டும் என்று சொல்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். இதை அப்படியே கடைப்பிடிப்பவர் நம்ம த்ரிஷா. இவருக்கு வைட்டமின் சி நிறைந்த பழங்கள் என்றால் மிகவும் விருப்பமாம். இவர், நிறைய எலுமிச்சை, ஆரஞ்சு மற்றும் இன்னும் நிறைய வைட்டமின் சி நிறைந்த பழங்களை சாப்பிடுவாராம். 


நல்ல தூக்கம்-நேர்த்தியான அழகு:


த்ரிஷா மேக்-அப் இல்லாமல் போனால் கூட, அத்தனை அழகாக தோன்றும் தன்மை உடையவர். அதற்கு காரணம், நல்ல தூக்கமும் நல்ல உணவு முறையும்தான். உடலை கச்சிதமாக வைத்துக்கொள்வதற்காக, த்ரிஷா யோகா பயிற்சி மேற்கொள்வாராம். 


நேரத்தியான கூந்தல் எப்படி? 


வேலை-பள்ளி-கல்லூரி-படிப்பு என ஓடும் நாம், சில சமயங்களில் தலையில் எண்ணெய் வைக்க கூட மறந்துவிடுகிறோம். ஆனால் கை நிறைய படத்தின் கால்ஷீட்டுகளை வைத்துள்ள த்ரிஷாவோ தலையில் எண்ணெய் வைக்க தவறவே மாட்டாராம். இதுதான் அவரது நேர்த்தியான கூந்தல் அழகிற்கு காரணம் என கூறிகின்றனர் நெட்டிசன்கள். அது மட்டுமன்றி, சில ஆயுர்வேத மூலிகைகளையும் த்ரிஷா தனது கேசத்திற்காக பயன்படுத்துவாராம். 


த்ரிஷா சாப்பிடும் நட்ஸ் வகைகள்:


உலர் பழங்கள் அல்லது நடஸ் வகைகளை தேவையான அளவு சாப்பிடுவது நம் உடலுக்கு நன்மை பயக்கும் என்பது நமக்கே தெரியும். இதையே தனது வாழ்விலும் கடைபிடிக்கிறார், த்ரிஷா. இவர், தினமும் தேவையான அளவு பாதாம், பிஸ்தா, முந்திரி ஆகியவற்றை சாப்பிடுவதுண்டு. இதை ஊறவைத்து சாப்பிட்டாலும் உடலுக்கு அதிக நன்மை பயக்கும். 


த்ரிஷாவிற்கு பிடித்த உணவு


எவ்வளவு கட்டுக்கோப்பாக இருந்தாலும், யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல த்ரிஷாவும் ஒரு உணவை பார்த்தால் மயங்கி விடுவாராம். தமிழ்நாட்டிற்கே பிடித்த பிரியாணிதான் அந்த ஃபேவரட் உணவு. த்ரிஷாவிற்கு பிரியாணி என்றால் மிகவும் விருப்பமாம். அதை சாப்பிட்டு விட்டு சிறிது உடல் எடை ஏறினால்கூட, உடற்பயிற்சி செய்து அதை குறைத்து விடுவாராம். 


மேலும் படிக்க | வயதில் மூத்த பெண்களை விரும்பும் மெஜாரிட்டி ஆண்கள்... ஏன் தெரியுமா?


 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ