பிரபல மோட்டார் சைக்கில் நிறுவனமாக TVS தனது புதுவரவான Radeon பைக்கினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வாடிக்கையாளர்களின் விருபத்திற்கேற்ப மேம்படுத்தப்பட்ட TVS Radon 110CC பைக்கினை TVS நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த அறிமுக விழாவில் பேசிய நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் சுதர்சன் வேணு தெரிவிக்கையில்...


"வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட மோட்டார் சைக்கிள் அனுபவத்தை அளிக்க 110 CC பிரிவில் மேம்பட்ட வடிவமைப்புடன் இந்த பைக்கினை அறிமுகப்படுத்தியுள்ளோம். புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்ட இன்ஜின், அதிக கிரவுண்ட் கிளி யரன்ஸ் என வாடிக்கையாளர்களை ஈர்க்கும் அம்சங்களுடன் இருக்கும் இந்த பைக்கானது நகர்ப்புற போக்குவரத்து நெரிசல், மற்றும் கிராமப்புற சாலைகளைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.


நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி KN ராதாகிருஷ்ணன் பேசுகையில்.. "மோட்டார் வாகன சந்தையில் 7% சந்தையை TVS வைத்துள்ளது, மேலும் பண்டிகைக் காலம் மற்றும் புத்தாண்டை இலக்கு வைத்து புதிய மாடல் பைக்குகளை அறிமுகம் செய்துள்ளோம். இந்த ஆண்டில் 2,00,000 ரேடியோன் மோட்டார் சைக்கிள்களை விற்பதற்கு திட்டமிட்டுள்ளோம்" என தெரிவித்துள்ளார்.


மேலும் இந்த புதியரக மோட்டார் சைக்கிளினை உருவாக்க ரூ.60 கோடி வரை நிறுவனம் முதலீடு செய்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


TVS Radon 110CC பற்றி சில குறிப்புகள்...


என்ஜின் அமைப்பு................Single cyl, air-cooled
டிஸ்ப்ளேஸ்மென்ட்..............109.7 cc
Max Power......................................8.3 bhp @ 7,000 rpm
Max Torque.....................................8.7 Nm @ 5,000 rpm
கியர்பாக்ஸ் ...........................4-speed manual
Kerb எடை .................................112 kg
Claimed Efficiency..........................69.3 kmpl
Ground Clearance.........................180 mm
Starting Price (Ex-Delhi)................₹ 48,400