இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) சனிக்கிழமை புதிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. அதில், ஆதார் அட்டையை புதுப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆதார் அட்டை எடுத்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆனவர்கள் உடனடியாக அடையாள ஆவணம் மற்றும் வசிப்பிட ஆவணங்களை சமர்பித்து புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியிருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | குடும்ப தலைவிகளுக்கு மகிழ்ச்சியான அப்டேட்!..எல்பிஜி விலை விரைவில் குறையும்


UIDAI வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில் " ஆதார் எடுத்து 10 ஆண்டுகளுக்கும் மேலானவர்கள் உடனடியாக தங்களின் ஆதாரை புதுப்பிக்க வேண்டும். அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்றுளை சமர்பித்து ஆதார் அட்டையை புதுப்பித்துக் கொள்ளலாம். myAadhaar போர்டலுக்கு சென்று ஆன்லைன் வழியாகவும், ஆவணங்களை சமர்ப்பித்து ஆப்லைன் வழியாகவும் ஆதார் எண்ணை அப்டேட் செய்து கொள்ளலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.


பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்ற பிறகு ஆதார் எண், அனைத்து அரசு நலத்திட்டங்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முக்கிய ஆவணமாக பயன்படுத்தப்படும் ஆதார் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அரசின் நலத்திட்டங்கள் எளிமையாக கிடைக்கிறது. வங்கிக் கணக்கு முதல் எல்பிஜி சிலிண்டர் கணக்கு வரை என அனைத்துக்கும் ஆதார் எண் அவசியமாக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இருக்கும் சுமார் 1,100-க்கும் மேற்பட்ட அரசு திட்டங்கள் மற்றும் திட்டங்கள் சேவைகளை வழங்க ஆதார் மட்டுமே முக்கிய ஆவணமாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.


இதுதவிர வங்கிகள், NBFC-கள் போன்ற பல நிதி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களை அங்கீகரிக்கவும், வாடிக்கையாளராக ஏற்றுக் கொள்ளவும் ஆதாரை பயன்படுத்துகின்றன. இதனால் ஆதார் குறித்த அப்டேட்டுகள் முறையாக செய்து வைத்திருந்தால் மட்டுமே இத்தகைய திட்டங்கள் உங்களுக்கு எளிமையாக கிடைக்கும். ஆதார் ஆணையத்தின் தகவல் துல்லியத்திற்காகவும் இந்த அறிவுறுத்தல் பொதுமக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | 7th Pay Commission: அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அப்டேட், எப்போது அறிவிப்பு?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ