உத்தரபிரதேசத்தின் சுற்றுலா தலமான செங்கோட்டையில் குழந்தைகாளுக்கு தாய்ப்பால் ஊட்டும் அறை திறப்பு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தளமான தாஜ்மஹாலில் முதன்முதலில் குழந்தைகாளுக்கு தாய்ப்பால் ஊட்டும் அறையைத் திறந்த பின்னர், இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI) தற்போது, செங்கோட்டையில் மற்றொரு தாய்ப்பால் ஊட்டும் அறையைத் திறந்துள்ளது.


தாய்ப்பால் ஊட்டும் அறையை ஆக்ரா MP எஸ்.பி. சிங் பாகேல் மற்றும் அவரது மனைவி மது பாகேல் ஆகியோர் வியாழக்கிழமை திறந்து வைத்தனர். வரலாற்று நினைவுச்சின்னங்களில் எந்தவொரு புதிய கட்டுமானம் கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் தடைசெய்திருந்தது. எனவே இந்த அறைகள் தற்போதுள்ள இடங்களில் செய்யப்பட்டுள்ளன. இந்த அறை முழுக்க குளிரூட்டப்பட்ட மற்றும் தாய்-குழந்தை இரட்டையரின் பாதுகாப்பை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது ”என்று எம்.பி. ஆக்ரா எஸ்.பி. சிங் பாகேல் ANI இடம் கூறினார்.


"தாஜ்மஹாலில் தாய்ப்பால் ஊட்டும் அறையை நாங்கள் நிறுவியபோது நிறைய பேர் பாராட்டினர். ஒரே நேரத்தில் குறைந்தது 5 பெண்களுக்கு இடமளிக்கக்கூடிய இரண்டு அறைகளை நாங்கள் திறந்துள்ளோம். எந்த விதமான காயங்களையும் தவிர்க்க, அறையில் ரப்பர் தரையையும் தளபாடங்களும் இல்லாமல் ஏ.எஸ்.ஐ.யின் தொல்பொருளியல் கண்காணிப்பாளர் பசந்த் குமார் ஸ்வார்க்கர் கூறினார்.


இது ஒரு நல்ல முயற்சி. குழந்தைக்கு உணவளிக்கும் போது நாங்கள் பல சிரமங்களை எதிர்கொண்டோம், ஆனால் இப்போது இந்த அறைகள் எங்களுக்கு ஆறுதல் அளிக்கும் ”என்று சுற்றுலாப் பயணி நேஹா மகேஸ்வரி கூறினார்.


பொது இடங்களில் இதுபோன்ற அறைகளை வழங்கிய அதிகாரிகளை நான் பாராட்டுகிறேன். இது தனது குழந்தைக்கு உணவளிக்கும் போது தாயின் தனியுரிமையையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் ”என்று மற்றொரு சுற்றுலா பயணி மேகா அகர்வால் கூறினார்.