அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிப்போர், இனி தனது கடந்த 5 ஆண்டுகால சமூக ஊடக செயல்பாட்டை விளக்க வேண்டும் என்று புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் சென்ற வருடம் செப்டம்பர் வரை 8.72 லட்சம் அமெரிக்க விசா வழங்கப்பட்டுள்ளன. உலக அளவில் அமெரிக்கா வருடத்துக்கு 1.47 கோடி மக்களுக்கு விசா வழங்கி வருகிறது. அமெரிக்க விசா பெற மக்கள் பெருமளவில் விண்ணப்பித்து வருகின்றனர்.  இந்த விசாக்களின் படிவமான டி 160 மற்றும் டி260 ஆகியவற்றில் சர்வதேச அளவில் பல புதிய விதிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக மும்பையில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. 


இந்த இரு படிவங்களும் ஆன்லைன் மூலம் அளிக்கப்படலாம். இந்த படிவங்களில் தற்போது விண்ணப்பதாரர்களின் சமூக வலை தள பெயர்கள் மற்றும் பதிவுகள் உள்ளிட்ட விவரங்கள் கேட்கப்படுகின்றன. முகநூல், ஃப்ளிக்கர், கூகுள்+, இன்ஸ்டாகிராம், லின்க்ட் இன், மற்றும் யூ டியுப் ஆகிய  சமூக வலைதள செயல்பாடு குறித்த விவரங்கள் கேட்கப்படுகின்றன. உபயோகிப் பெயர் மற்றும் பதிவுகள் தற்போது கேட்கப்படுகின்றன. இந்த தளங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் வரையிலான காலத்தில் இந்தியர்களுக்கு அமெரிக்கா 8 லட்சத்து 72 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசாக்களை வழங்கியுள்ளது.


உலக அளவில் சுமார் ஒன்றரை கோடி பேர் விசா பெற்றுள்ளனர். இனி விசா விண்ணப்பம் செய்வோர் தாங்கள் 5 ஆண்டுகளில் பயன்படுத்திய சமூக ஊடகங்களைப் பற்றி விசா நேர்காணல் படிவத்தில் உள்ள கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். இதில் தூதரக அதிகாரிகள் திருப்தி அடையவில்லை எனில் அவர்களுக்கு விசா விண்ணப்பங்களை நிராகரிக்க உரிமை உண்டு. அவர்களுடைய முடிவே இறுதியானது என்பதால் இதை எதிர்ப்பது இயலாத காரியமாகும். அத்துடன் இந்த விதிமுறைகள் மாணவர் மற்றும் பயணிகள் விசாவுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.