ஓட்டுநர் உரிமம் (Driving Licence), Learning Licence, வாகன அனுமதி மற்றும் பதிவு (Vehicle Permit and Registration) ஆகியவற்றின் செல்லுபடியாகும் கால அளவை (Validity) மத்திய அரசு டிசம்பர் 31 வரை நீட்டித்துள்ளது. லாக்டௌன் காரணமாக இந்த ஆவணங்களின் செல்லுபடியாகும் தன்மை மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மத்திய அரசு (Central Government) ஜூன் 30 வரை வேலிடிடியை நீட்டித்தது. அதன் பிறகு செப்டம்பர் 30 வரை அது நீட்டிக்கப்பட்டது. இப்போது டிசம்பர் 31 வரை இந்த ஆவணங்கள் அனைத்தும் செல்லுபடியாகும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், ஓட்டுநர் உரிமம் மற்றும் மோட்டார் வாகன ஆவணங்களின் செல்லுபடியாகும் காலத்தை இந்த ஆண்டு டிசம்பர் 31 வரை நீட்டித்துள்ளது. இது மக்களுக்கு பெரும் நிவாரணத்தை அளித்துள்ளது.


கொரோனா வைரஸ் (Corona Virus) தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, ஓட்டுநர் உரிமம் மற்றும் மோட்டார் வாகனங்களின் தேவையான அனைத்து ஆவணங்களின் செல்லுபடியாகும் தன்மையின் கால அளவை 2020 டிசம்பர் 31 வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தெரிவித்துள்ளது. முதலில் ஆவணங்களின் செல்லுபடியாகும் காலம் செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டது. இது இப்போது இந்த ஆண்டு இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


ALSO READ: Aadhar Card-ல் இந்த 5 விஷயங்களை update செய்ய எந்த ஆவணமும் தேவை இல்லை!!


மோட்டார் வாகனச் சட்டம் (Motor Vehicle Act) , 1988 மற்றும் மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989 ஆகியவற்றின் கீழ் வாகனத்தின் ஃபிட்னஸ், பர்மிட், உரிமம், பதிவு அல்லது பிற ஆவணங்களின் செல்லுபடியாகும் கால அளவை 2020 டிசம்பர் 31 வரை நீட்டிக்க அமைச்சகம் முடிவு செய்துள்ளது.



லாக்டௌன் காரணமாக, வாகனங்களின் ஆவணங்கள் புதுபிக்கப்படாமலோ அல்லது அதற்கான சாத்தியமான சூழல் ஏற்படாமல் இருந்தாலோ, மற்றும், 2020 பிப்ரவரியோடு வேலிடிடி முடிந்துவிட்ட அவணங்கள், மற்றும் 31 டிசம்பர் 2020-க்குள் வேலிடிடி முடியப்போகும் நிலையில் இருக்கும் வாகனங்கள், இவை அனைத்துக்கான செல்லுபடியாகும் கால அளவு டிசம்பர் 31 2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.


ALSO READ: மூத்த குடிமக்களுக்கான வருமான வரிச்சலுகைகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்...!!!