நாட்டின் அதிவேகமான ரயிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் தனது முதல் வர்த்தக பயணத்தை இன்று தொடங்கியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 


இந்தியாவில் முதல் முறையாக ‘ரெயில்-18’ என்ற பெயரில் என்ஜின் இல்லாத ரெயில் தயாரிக்கப்பட்டுள்ளது. 16 பெட்டிகள் கொண்ட இந்த ரெயில், சென்னை பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது."வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்" என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த ரெயில்களுக்கு என்ஜின் தனியாக இருக்காது, பெட்டிகளுடன் இணைக்கப்பட்டதாக இருக்கும். 


மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடிய இந்த ரயிலை வெள்ளிக்கிழமை அன்று பிரதமர் நரேந்திரமோடி கொடி அசைத்து துவக்கி வைத்தார். டெல்லியில் இருந்து வாரணாசி சென்ற ரயிலானது மீண்டும் டெல்லி திரும்பியது. இடையில் பழுது ஏற்பட்டு பாதியில் நின்றது.


பழுது சரிசெய்யப்பட்டு விட்ட நிலையில் வர்த்தக ரீதியிலான பயணத்தை வந்தே பாரத் இன்று தொடங்கியுள்ளது. அடுத்த இரு வாரங்களுக்கு இந்த ரயிலின் டிக்கெட்டுகள் அனைத்தும் முன்பதிவுசெய்யப்பட்டுள்ளன. 820 கிலோ மீட்டர் தொலைவை 9 மணி நேரம் 45 நிமிடங்களில் இந்த ரயில் சென்றடையும்.


டிக்கெட் விலை:-


டெல்லி - கான்பூர்


Chair Car - 1090rs
Executive - 2105rs


டெல்லி - அலகாபாத்


Chair Car - 1395rs
Executive - 2750rs


டெல்லி - வாரணாசி


Chair Car - 1760rs
Executive - 3310rs


கான்பூர்- அலகாபாத்


Chair Car - 595rs
Executive - 1170rs


கான்பூர்- வாரணாசி


Chair Car - 1020rs
Executive - 1815rs


அலகாபாத்- வாரணாசி


Chair Car - 460rs
Executive - 905rs