குஃப்ரி மற்றும் சிம்லாவில் லேசான பனி ஜனவரி 27 திங்கள் அன்று மாலை 6 மணி முதல் தொடங்கியது, அதிகரித்து வரும் நிலையில் குளிர் காரணமாக அப்பகுதி மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதே நேரத்தில் குஃப்ரி-ஃபாகு சாலையில் வழுக்கும் பனிப்பொழிவு காரணமாக வாகனங்களின் இயக்கம் கிட்டத்தட்ட 24 மணி நேரத்திற்கும் மேலாக தடைப்பட்டுள்ளது. இதன் காரணமாக சிம்லா காவல்துறையினர், பாதை திறக்கப்படும் வரை மக்களை காத்திருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். அல்லது வேறு மாற்று வழியைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். 


சிம்லா-வில் நேற்றைய தினம் பனி மழை துவங்கியுள்ள நிலையில் முன்னதாக நாள் முழுவதும் மேகமூட்டத்துடன் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர் பிற்பகலில் பனி தூறல் தொடங்கியது எனவும் கூறப்படுகிறது.


குஃப்ரியில் பனிப்பொழிவு தொடங்கிய பின்னர், சிம்லாவுக்கு திரும்புமாறு சுற்றுலாப் பயணிகளை காவல்துறை அறிவுறுத்த தொடங்கியுள்ளது.


இதனிடையே சிம்லாவின் ஜாகூவின் உச்சமும் சரிந்தது. அரை கடந்த 6-க்குப் பிறகு நகரத்தில் லேசான மழை பெய்தது. வானிலை மாற்றத்திற்குப் பிறகு, நகரில் குளிர் அதிகரித்துள்ளது. இதனையடுத்து இன்று (2020 ஜனவரி 28) செவ்வாய்க்கிழமை வானிலை ஆய்வு துறை பனி எச்சரிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.


செவ்வாய்க்கிழமை மாநிலத்தின் 6 மாவட்டங்களில் பலத்த மழை மற்றும் பனிப்பொழிவு குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிம்லா, கின்னௌர், சோலன், சிர்மௌர், காங்க்ரா, மற்றும் சம்பா ஆகியவை இதில் அடங்கும். மேலும் ஜனவரி 29-ஆம் தேதி, முழு மாநிலத்திலும் வானிலை மோசமாக இருக்கும், 30-ஆம் தேதிக்கு பின்னரே சூரிய ஒளி கிடைக்கும் என்றும் வானிலை அறிக்கை குறிப்பிடுகிறது. இதனைத்தொடர்ந்து 31 மற்றும் பிப்ரவரி 1 தேதிகளில் மலைப்பகுதிகளில் மழை மற்றும் பனி ஏற்பட வாய்ப்பு உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.