சனியின் ராசிக்கு வரும் சுக்கிரன்: இந்த ராசிக்காரர்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்
Astrology: சுக்கிரனின் ராசி மாற்றம் சில ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சியை அள்ளித் தரும். சுக்கிரனின் மாற்றம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பாக அமையப்போகிறது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ஜோதிட சாஸ்திரப்படி, செல்வம், மகிழ்ச்சி, செழுமை ஆகியவற்றின் காரணியான சுக்கிரன் பிப்ரவரி 27ம் தேதி தனது ராசியை மாற்றப் போகிறார். சுக்கிரன் மகர ராசியில் சஞ்சரிப்பார். மகர ராசியை சனி தேவன் ஆட்சி செய்கிறார். சனி மற்றும் சுக்கிரன் இடையே நட்பு உணர்வு உள்ளது.
இப்படிப்பட்ட நிலையில் சுக்கிரனின் ராசி மாற்றம் சில ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சியை அள்ளித் தரும். சுக்கிரனின் மாற்றம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பாக அமையப்போகிறது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு ஜாதகத்தில் சுக்கிரன் 10ஆம் வீட்டில் நுழைவார். ஜாதகத்தின் பத்தாம் வீடு தொழில் மற்றும் புகழுக்கு உரியது. ஆகையால் வேலை செய்பவர்கள் தங்கள் தொழிலில் முன்னேற்றம் அடைவார்கள். சுக்கிரன் சஞ்சாரத்தின் போது புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். இதுதவிர, வியாபாரத்தில் பணவரவும் லாபமும் அதிகமாக இருக்கும்.
மேலும் படிக்க | பணத்தை தண்ணீராய் செலவு செய்பவரா? உங்கள் ராசி இந்த ஐந்து ராசிகளின் ஒன்று!
ரிஷபம்
சுக்கிரனின் ராசி மாற்றத்தால் நிதி நிலை சிறப்பாக இருக்கும். சுக்கிரன் சஞ்சாரம் செய்யும் காலத்தில் சிறிய அளவு முயற்சி செய்தாலே அதிக வெற்றியைப் பெறுவீர்கள். இதனுடன், இந்த நேரத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த வேலைகள் முடிவடையும். மாணவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். வியாபாரத்தில் நிதி நிலை சிறப்பாக இருக்கும்.
தனுசு
சுக்கிரன் சஞ்சாரத்தின் போது தனுசு ராசிக்காரர்களின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் மங்களகரமான நிகழ்வுகள் நடக்கும். சுக்கிரனின் இந்த மாற்றம் முதலீட்டிற்கு சிறந்ததாக இருக்கும். வியாபாரத்தில் சிக்கிய பணம் திரும்பக் கிடைக்கும். இந்த ராசியில் சுக்கிரன் செல்வத்தின் வீட்டில் சஞ்சரிப்பார்.
மீனம்
ஜாதகத்தின் 11வது வீட்டில் சுக்கிரன் சஞ்சரிக்கிறார். பெயர்ச்சி காலத்தில் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களால் நிதி ஆதாயம் ஏற்படும். வேலைவாய்ப்பில் பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்பு ஏற்படும். பணியிடத்தில் மன அழுத்தம் குறையும். உத்தியோகத்தில் சில புதிய பொறுப்புகள் கிடைக்கும். தொழிலில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | ராகுவின் மாற்றத்தால் இந்த ராசிக்காரகளின் தலைவிதி தலைகீழாக மாறும், மகிழ்ச்சி பொங்கும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR