சினிமா துறையை பொருத்த வரை யாருக்கு எப்பொழுது என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. பாலிவுட்டின் வி. விஸ்வநாத் மற்றும் ஹேமந்த் குமார் போன்ற பிரபலாமான இசை அமைப்பாளர்களின் குழுவில் பாடுபவராக இருந்தவர், வாழ்க்கையின் நிர்பந்தத்தால் இன்று மும்பையின் தெருக்களில் பாடுபவராக மாற்றி உள்ளது. அந்த நபரின் வீடியோ வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் ட்விட்டர் என கடந்த சில நாட்களுக்கு வைரலாகி வருகிறது. இதில் ஒரு வயதான கலைஞருக்கு ஏற்ப்பட்ட நிலைமையை பற்றி பேசுகிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வயதான கலைஞரின் பெயர் கேஷவ் லால். கடந்த சில நாட்களுக்கு முன்பு, மும்பையில் ஒரு இடத்தில் பாடிக்கொண்டே ஒரு குஜராத்தி குடும்பத்தின் வீட்டின் முன் சென்றுள்ளார். அங்கே கேஷவ் லால் பாடிய பாடலை வீடியோவாக எடுக்கப்பட்டது. அப்பொழுது அவரிடம் கேட்டபோது, ஷாந்தாரம் மற்றும் ஹேமந்த் குமார் இசைக் குழுவில் தான் பாடல்களைப் பாடியதை பற்றி கூறினார். ஆனால் காலப்போக்கில் தனக்கு வாய்ப்பு சரியாக அமையாததால், வேலை குறைந்து வாழ்க்கை இப்படி மாறிவிட்டது, இதனால் தான் தெருக்களில் பாடும் நிலை ஏற்ப்பட்டு உள்ளது. "இது எல்லாம் விதி" என்று கூறியுள்ளார்.


இவர் குஜராத் மாநிலத்தின் உள்ள கண்டி பகுதியை சேர்ந்தவர். தற்போது இவர் தந்து மனைவியுடன் தெருக்களில் பாடி வருகிறார். வயதான நிலையிலும் குரலின் இனிமை குறையவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது. மேலும் ஹார்மோனியத்தின் மீது அவரது விரல்கள் விளையாடுகிறது.


 



இவர்களுக்கு பாலிவுட்டில் இருந்து ஆதரவு தருமாறு, இந்த வீடியோக்களை ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கில் பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோ பார்த்து இவர்களுக்கு உதவ யாராவது முன்வர வேண்டும் என்பதே நம் அனைவரின் எதிர்பார்ப்பு ஆகும்.