விநாயக சதுர்த்தி 2022: கிரிகோரியன் நாட்காட்டியில் ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் திருவிழா வருகிறது. இந்த ஆண்டு விழா ஆகஸ்ட் 31ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 9ஆம் தேதி நிறைவடைகிறது. விநாயகர் சிலைகள் வீடுகளிலோ அல்லது அழகான பந்தல்களிலோ நிறுவப்பட்டு பரவச நிகழ்வைக் கொண்டாடுகின்றன. நிகழ்வின் போது, ​​விநாயகப் பெருமானை வணங்கி, மக்கள் பிரார்த்தனை மற்றும் பிரசாதத்தை வழங்குகிறார்கள், பின்னர் அவை அனைவருக்கும் பகிரப்படுகின்றன. இந்த ஆண்டு, நம்மில் பலர் விநாயகரை வீட்டிற்கு அழைத்துச் சென்று, விநாயக சதுர்த்தியின் போது நம் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அன்பான வாழ்த்துக்களைத் தெரிவிப்போம். உங்கள் அன்புக்குரியவர்களுடன் நீங்கள் பகிர்ந்து கொள்ளக்கூடிய சில அழகான விநாயக சதுர்த்தி வாழ்த்துகள் இங்கே.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1. வெற்றி கணபதி புதிய வெற்றிகளை குவித்து, உங்களை வளப்படுத்தட்டும்! விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்!


2. விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்! கணபதி என்றிட கலங்கும் வல்வினை; கணபதி என்றிட காலனும் கைதொழும்; கணபதி என்றிட கருமம் ஆதலால், கணபதி என்றிட கவலை தீருமே!


3.ஞானம், ஆரோக்கியம், செல்வம் உள்ளிட்ட அனைத்து செல்வத்தையும் அள்ளித் தரும் விநாயகரை விரதம் இருந்து வழிபட்டநம் வாழ்வின் அனைத்து வளத்தையும் பெற்று சிறப்பாக வாழ்வோம்!



மேலும் படிக்க | Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்


4. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தில் உள்ளவருக்கும், இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!


5. உன்னை நினைத்து உயிர் உருகி செய்யும் செயல் ஆகுமே, விஜயமாக்குபவனே, முழுமுதற் கடவுளே, வினைதீர்க்கும் விநாயகனே, விநாயகர் சதுர்த்தி கொண்டு உம்மை அடிப்ணிந்து வணங்குகிறோம், காத்தருள்வாய் கணேசா!


6. கற்பக ஜோதியே, சுடர் ஒளியின் தேவனே, அண்டம் முழுதும் தொந்தியில் அடக்கியவன, நீ விரும்பி உண்ணும் கொழுக்கட்டையாய் நான் மாற வரம் வேண்டி உன் சரணம் தொழுகின்றேன் அப்பனே!


7. நிறைந்த செல்வமும், நீண்ட ஆயுளும் பெற்று நலமுடன் வாழ்க வளமுடன்! இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!


8. செயல்களின் துவக்கமானவனுக்கு, தமிழ்கடவுளின் தனயனுக்கு பெற்றோரை உலகமாக்கியவனுக்கு, விழா எடுப்போர் அனைவருக்கும், விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்!


9.காக்கும் கடவுள், கணேசனை நினை! கவலைகள் அகல அவன் அருள் துணை! வினாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!


10. அருகம்புல் பிரியனே, உனை நினைத்தே வாழ்கிறோம்! எங்களது வினைதீர்த்து அருள் புரிவாய் கணபதியே! விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்!


11. வேலவனுக்கு முன்னவனே, வேண்டுதலுக்கு உரியவனே, வேளைக்கும் அருள் புரிபவனே, உனை வேண்டி நின்று வாழ்கிறோம்! எம் வினை தீர்த்து, வேண்டுதல்களுக்கு விடைதருவாய்! விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!


12. முதல் கடவுள் நீதான், எங்கள் குலக் கடவுளும் நீதான்! உன்னை நாடி வரும்போது, உள்ளத்தை சுத்தமாக்கி வாழ்க்கையை நல்லதாக்கி வாழ்ந்திட வையப்பா, வையகம் வாழ்த்தும் விநாயகா! இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!


13. பாலும் தெளிதேனும், பாகும் பருப்பும், இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்! கோலம் செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே, நீ என்க்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா! வினையெல்லாம் தீர்த்துவைப்பாய் விநாயகா! விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்!


விநாயகப் பெருமான் உங்களுக்கு ஆரோக்கியம், செல்வம், மகிழ்ச்சி ஆகிய பொக்கிஷங்களை அளித்து, உங்கள் தடைகள் அனைத்தையும் நீக்கி அருள்பாலிக்கிறார்.  இனிய விநாயக சதுர்த்தி!


மேலும் படிக்க | Astro: வாழ்க்கையை புரட்டி போடும் ராகு-கேது தோஷம்; சில எளிய பரிகாரங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ