மும்பையில் நேற்று நடைபெற்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி - அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள், கிரிக்கெட் நட்சத்திரங்கள் பங்கேற்று வாழ்த்தினர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விராட் கோலியும், நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த 11-ம் தேதி இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர். 4 ஆண்டு கால காதலுக்கு பிறகு மிகவும் ரகசியமாக நடத்தப்பட்ட இந்த திருமண நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்களும், குடும்ப நண்பர்களுமே பங்கேற்றனர். 


கடந்த 21-ம் தேதி இவர்கள் இருவரும் இந்தியா திரும்பினர். அதைத்தொடர்ந்து, டெல்லி தாஜ் ஹோட்டலில் விராட் கோலி - அனுஷ்கா ஜோடியின் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. 


இந்நிலையில், மும்பையில் 5 ஸ்டார் ஓட்டலில் நேற்று மற்றொரு வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், அனில் கும்ப்ளே, சுனில் கவாஸ்கர், வீரேந்தர் சேவாக், உமேஷ் யாதவ்,குல்தீப் யாதவ், செடேஷ்வர் புஜாரா, ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரீத் பும்ரா, சந்தீப் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின், சாய்னா நேவால் உள்ளிட்ட  விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.


பாலிவுட் பிரபலங்களில் ஷாருக் கான், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் பச்சன், ரேகா, கங்கனா ரனாவத், கரன் ஜோகர் உள்பட இந்த விருந்தில் பங்கேற்றனர்