மணமகளிடம் கன்னித்தன்மையை பரிசோதிக்கச் சொல்வதும் பாலியல் வன்முறைதான் என்று மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகாராஷ்டிர மாநிலத்தில் குறிப்பிட்ட சில சமூகங்கள் திருமணமான புதுப் பெண்களுக்கு கன்னித்தன்மை சோதனையை கட்டாயப்படுத்தி செய்கின்றன. அம்மாநிலத்தில் குறிப்பிட்ட சில பிரிவினர் திருமணத்தின் போது மணமகளிடம் கன்னித்தன்மை உள்ளதா என்று பரிசோதனை செய்யச் சொல்வதாக தகவல்கள் வெளியானது. இது தொடர்பாக ஒரு சில சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளை அம்மாநில உள்துறை அமைச்சர் ரஞ்சித் பாட்டீல் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் சிவசேனாவின் செய்தி தொடர்பாளர் நீலம் கோர்ஹே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 


அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ரஞ்சித் படேல், கன்னித்தன்மை சோதனை என்பது ஒரு வகையான பாலியான துன்புறுத்தல் தான் எனவும், சட்டம் மற்றும் நீதித்துறையிடம் ஆலோசித்த பின்னர் இது தண்டக்கப்பட வேண்டிய குற்றம் என்று சுற்றறிக்கை அனுப்பப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்குகள் குறைந்த அளவே நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதாகவும் அவர் கூறினார்.


இதற்கான தண்டனை விபரம் குறித்து சட்ட வல்லுனர்களிடம் கலந்தாலோசித்த பின்னர் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.