Virtual Card: உங்களை online fraud-டிலிருந்து காப்பாற்றும் இந்த ஆபத்பாந்தவன்!!
வீட்டிலிருந்தபடியே தேவையானவற்றை வாங்கிக்கொள்ளும் ஆன்லைன் வசதியை யார்தான் வேண்டாம் எனக் கூறுவார்கள். ஆனால், சிலர், இதில் இருக்கும் அபாயங்களுக்காக இதை தவிர்ப்பதும் உண்டு.
ஆன்லைன் ஷாப்பிங் (Online Shopping) இந்நாட்களில் பலராலும் விரும்பப்படும் ஒரு விஷயமாகும். வீட்டிலிருந்தபடியே தேவையானவற்றை வாங்கிக்கொள்ளும் வசதியை யார்தான் வேண்டாம் எனக் கூறுவார்கள். ஆனால், சிலர், இதில் இருக்கும் அபாயங்களுக்காக இதை தவிர்ப்பதும் உண்டு. குறிப்பாக நாம் ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு பயன்படுத்தும் கார்டுகளில் யாராவது மோசடி செய்து விடுவார்களோ என்ற அச்சம் அனைவருக்கும் உண்டு.
ஆன்லைன் ஷாப்பிங்கின் போது மோசடியைத் தவிர்க்க மெய்நிகர் அட்டை (Virtual Card) ஒரு சிறந்த வழியாகும். இது வங்கிகள் மூலம் வழங்கப்பட்டுள்ள ஒரு வசதி. இதில், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ID-க்கள் உருவாக்கப்பட்டு ஆன்லைன் கார்டுகள் உருவாக்கப்படுகின்றன. ஆன்லைன் ஷாப்பிங்கில் மட்டுமே இதைப் பயன்படுத்த முடியும். இதில், ATM போலவே PIN உருவாக்கப்பட்டு, அது போலவே CVV எண்ணும் கிடைக்கும். தேவையானவற்றை வாங்கிய பிறகு இதை எப்போது வேண்டுமானாலும் டீ-ஆக்டிவேட் செய்து கொள்ளலாம்.
ALSO READ: PAN Card பெற பத்தே நிமிடங்கள் போதும்: இந்த எளிய வழிகளை பின்பற்றுங்கள்!!
வர்சுவல் கார்ட் பாதுகாப்பானது
வர்சுவல் கார்டுகள் முற்றிலும் பாதுகாப்பானவை என்று வங்கி நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதில், கணக்கின் எந்தவொரு விவரங்களையும் பகிர்ந்து கொள்ளாமல் ஆன்லைன் ஷாப்பிங் போன்றவற்றுக்கு நீங்கள் பணம் செலுத்தலாம். வர்சுவல் கார்ட் 24 முதல் 48 மணி நேரம் மட்டுமே செயலில் இருக்கும். ஷாப்பிங் செய்த பின் எளிதாக இதை ரத்து செய்து விடலாம்.
வர்சுவல் கிரெடிட் கார் என்றால் என்ன
இது ஒரு மின்னணு கார்டாகும் (Electronic Card). இது வங்கியின் இணைய வங்கி சேவையின் உதவியுடன் தயாரிக்கப்படுகிறது. இதை உருவாக்க, உங்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டின் விவரங்கள் கொடுக்கப்பட வேண்டும். ஒவ்வொரு வர்சுவல் கார்டுக்கும் அதன் சொந்த எண், சி.வி.வி எண் மற்றும் செல்லுபடியாகும் நேரம் ஆகியவை இருக்கும். ஏடிஎம் கார்டு போல இயந்திரத்தில் இதைப் பயன்படுத்த முடியாது. ஒவ்வொரு ஆன்லைன் பரிவர்த்தனைக்கும் ஒரு தனி கார்டை உருவாக்க வேண்டும். கடன் வரம்பு மற்றும் செல்லுபடியாகும் கால அளவு அதாவது வேலிடிடி வெவ்வேறு வங்கிகளுக்கு மாறுபடும்.
வர்சுவல் கார்டுகளின் நன்மைகள்
- உங்கள் ஈ-மெயில் அகௌண்ட் கொண்டே ஆன்லை வர்சுவல் கார்டுகள் அதாவது ஈ-கார்டை உருவாக்க முடியும்.
- பயனர்கள் இந்த அட்டையை பயன்பாட்டிற்கு பிறகு ரத்து செய்யலாம்.
- 100 ரூபாயிலிருந்து 50 ஆயிரம் ரூபாய் வரையிலான தொகைக்கு வர்சுவல் கார்டுகளை உருவாக்கலாம்.
- ஒரு மாதத்தில் பல வர்சுவல் கார்டுகளை உருவாக்கிக் கொள்ளலாம்.
ALSO READ: முக்கியமான 4 விதிகளை மாற்றிய SBI... தண்டனையிலிருந்து தப்ப இதை படியுங்கள்!!