விஸ்தாரா ஏர்லைன்ஸின்  கோடைகால சிறப்பு விற்பனை: டாடா குழுமத்தின் ஆதரவுடன் செயல்படும் விஸ்டாரா ஏர்லைன் கோடை காலத்திற்கான சிறப்பான சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது.  விமானத்தில் பயணம் செய்ய திட்டமிட்டிருந்தால், உடனடியாக உங்கள் டிக்கெட்டை இன்றேமுன்பதிவு செய்யுங்கள். இதை விட மலிவான விமான டிக்கெட்டுகளை எங்குமே வாங்க முடியாது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆம், விஸ்தாரா விமான நிறுவனம் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களில் கோடைகால சலுகையை அறிவித்துள்ளது. இந்தச் சலுகை எகானமி, பிரீமியம் எகானமி மற்றும் பிஸினஸ் வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிடைக்கும்.


நாளை வரை முன்பதிவு செய்யலாம்


விஸ்தாரா வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த சலுகையின் கீழ், உள்நாட்டு விமானங்களுக்கான முன்பதிவு குறித்த விபரங்களை குறிப்பிடுகையில், சலுகை விலையிலான விமான டிக்கெட்டுகளை ஏப்ரல் 21 ஆம் தேதி இரவு 21.59 மணி வரையில் இந்த முன்பதிவு செய்பவர்களுக்கு இந்த சலுகை கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த சலுகையில் எகானமி வகுப்பிற்கான விமான டிக்கெட்டை ரூ.2,499 என்ற கட்டணத்திலும், பிரீமியம் வகுப்பிற்கு ரூ.3,459 மற்றும் பிஸினஸ் வகுப்பிற்கு ரூ.9,999 என்ற கட்டணத்திலும் வாங்கலாம்.


மேலும் படிக்க | Boeing 737 Max விமானத்தை இயக்க 90 SpiceJet விமானிகளுக்கு தடை: DGCA


சர்வதேச விமானங்களுக்கான முன்பதிவு  


மறுபுறம், சர்வதேச விமானங்களை பொறுத்தவரை, எகானமி வகுப்பிற்கு ரூ.12,999, பிரீமியம் எகானமிக்கு ரூ.17,249 மற்றும் பிஸினஸ் வகுப்பிற்கு ரூ.35,549 என்ற அளவில் சலுகை கட்டன இருக்கும் . இதற்கு, ஏப்ரல் 19  முதல் 25ம் தேதி வரை  இரவு மணி 23.59 வரை முன்பதிவு செய்யலாம். உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கான இந்த கட்டணம் ஒரு வழிக்கான கட்டணம்  என்பது குறிப்பிடத்தக்கது


வழித்தடங்கள் விபரம்


சலுகை திட்டத்தில் பயணிகள் டெல்லி, மும்பை மற்றும் உதய்பூரிலிருந்து டேராடூன், சண்டிகர், லக்னோ, அமிர்தசரஸ், லே, ஸ்ரீநகர், வாரணாசி, கோவா, கொச்சி, பெங்களூர் மற்றும் கொல்கத்தா ஆகிய இடங்களுக்குச் செல்ல மலிவான கட்டணத்தில் முன்பதிவு செய்யலாம்  . இந்த சிறப்பு சலுகையில், டெல்லி மற்றும் மும்பையில் இருந்து காத்மாண்டு, கொழும்பு, டாக்கா, சிங்கப்பூர் மற்றும் துபாய் போன்ற சர்வதேச வழித்தடங்களுக்கும் முன்பதிவு செய்யலாம். இந்த வழித்தடங்களில் 20 ஜூன் முதல் 30 செப்டம்பர் 2022 வரையிலான பயணத்திற்கு முன்பதிவு செய்யலாம்.


டிக்கெட் முன்பதிவு செய்யும் விதம்


விமானத்தின் இணையதளம், ஆண்ட்ராய்டு மற்றும் iOS மொபைல் பயன்பாடுகள், விஸ்தாராவின் விமான டிக்கெட் அலுவலகம் (ATO), ஆன்லைன் பயண முகமைகள் (OTA) மற்றும் பயண முகவர்கள் மூலம் விஸ்தாராவின் கோடைகால சலுகை திட்டத்தின் கீழ் நீங்கள் முன்பதிவு செய்யலாம்.


மேலும் படிக்க | Amway India மோசடி; ரூ.757.77 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR