செல்வம் சேர மகாலட்சுமி சக்கர வழிபாடு மிக அவசியமானது. மகாலட்சுமியின் கடைக்கண் பார்வை நம் மீது விழுந்து விட்டால் செல்வ வளத்திற்கு என்ன குறைச்சல் இருக்கப் போகிறது?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகாலட்சுமியின் அருட்பார்வை ஒருவர் மீது விழுந்து விட்டால் அவருக்குச் செல்வ வளத்திற்கு குறைவே இருக்காது.


பொருட் செல்வம் வரும்போது, அத்துடன் பிற செல்வங்களும் கூடுதலாகவே வந்துவிடுகிறது. "ஸர்வ ஸம்பத் ஸம்ருத்யர்த்தம்'' என்ற மந்திரத்தைத் தினந்தோறும் 25 ஆயிரம் முறை என தொடர்ந்து ஆறு நாட்கள் உச்சரித்து வர வேண்டும்.


Also Read | கும்பகோணத்தில் உள்ள புகழ்பெற்ற சாரங்கபாணி கோவிலின் தொன்மை


இந்த பூஜையை எப்படி செய்வது? நியமங்கள் என்ன? அதிகாலை வேளையில் காலைக் கடன்களை முடித்து விட்டுக் கிழக்கு முகமாக அமர்ந்து இந்த மந்திரத்தை ஜெபிக்க வேண்டும்.


எத்ருஸா த்ராகீயஸ்யா தரதஸித-நீலோத்பல-ருசா
தலியாம்ஸம் தீ நம ஸ்நபய க்ருபயா மாமபி ஸிவே
அநே நாயம் தந்யோ பவதி நசதே ஹாநி-ரியதா
வநே வா ஹர்ம்யே வா ஸமகர-நிபாதோ ஹிமகர''



இந்த மந்திரத்தை ஜெபித்து மகாலட்சுமியை வணங்க வேண்டும். பிறகு மகாலட்சுமி அன்னைக்கு நிவேதனமாக தேன் அல்லது பாயசம் படைக்க வேண்டும். தேவியின் கடைக்கண் பார்வைப் பட்டால் வாழ்வில் அனைத்து சம்பத்துகளும் தானாகவே வந்து சேரும்.


வாழ்வில் நல்ல காலம் ஆரம்பித்து விட்டது என்றால் முனைப்புடன் செயல்படும் ஆற்றலும், தைரியமும், பக்கபலமும் வந்து விடும்.


அந்த முனைப்பு வருவதற்கு மகாலட்சுமி சக்கர பூஜை உதவும். மகாலட்சுமி சக்கரம், செப்புத் தகடு, வெள்ளித் தகடு, பஞ்சலோகத் தகடு என பல வகைகளில் கிடைக்கிறது. அதை வாங்கி பூஜையறையில் வைத்து வணங்கவேண்டும்.


Also Read | அரசுக் கட்டுப்பாட்டிலிருந்து ஆலயங்களை விடுவிக்க மூன்று கோடி பேர் விருப்பம்  


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR