தள்ளாத வயதில் ஆகாய சாகசத்தில் சாதனை படைத்த 102 வயது ஆஸ்திரேலியா மூதாட்டி...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தென் ஆஸ்திரேலியாவில் விமானத்திலிருந்து 4,200 மீட்டர் உயரத்திலிருந்து (14,000 feet) குதித்து சாகசம் புரிந்துள்ளார் 102 வயது மூதாட்டி ஐரீன் ஓ'ஷிய. 


மணிக்கு 220 கிலோமீட்டர் வேகத்தில் Skydive செய்தது சாதாரணமாய்த் தெரிந்ததாகச் சொன்னார் ஓ'ஷி. தசை தொடர்பான நரம்பணு நோய்க்கு நிதிதிரட்டும் நோக்கில் அவர் இந்த சாகசத்தை செய்துள்ளார்.


கடந்த 2016 ஆம் ஆண்டு தொடங்கியது இவரின் சாகசப் பயணம். இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் செய்த சாகசம் வரலாற்றில் இடம்பிடித்துள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறினர். இவரின் சாகச வீடியோக்கள் இணையத்தில் வைரலாக பறவை வருகிறது. அந்த வீடியோ பதிவு கீழே இணைக்கப்பட்டுள்ளது.