இணையத்தை கலக்கும் வயலின் இசையில் மதிமயங்கிய 11 மாத வயது குழந்தையின் க்யூட் வீடியோ!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலகில் உள்ள எல்லா உயிர்களும் ஒவ்வொரு விஷயத்திற்கு அடிமையாக இருப்பது மறுக்கமுடியாத உண்மை. அது, மனிதனாய் இருந்தாலும் சரி, விலங்குகள் அல்லது தாவர உயிரிகலானாலும்  சரி. நாம் அனைவரும் எதாவது ஒன்றுக்கு கட்டாயம் அடிமைகளாக இருப்போம். சிலர் உணவுக்கு அடிமையாக இருப்பார்கள், சிலர் வாசனை திரவியங்கள் மீது அடியாக இருப்பார்கள், இன்னும் சிலர் வித்தியாசமான் பழக்கங்களுக்கு அடிமையாக இருப்பார்கள். ஆனால், மனிதனாய் பிறந்த அனைவரும் இசை என்ற ஒன்றுக்கு கண்டிப்பாக அடிமையானவர்களாக இருப்பார்கள். 


இசையை பிடிக்காதவர்கள் இந்த உலகத்தில் இருப்பது அதிசயத்திற்கு அப்பாற்பட்டது என்றும் கூறலாம். நாம் கோவமாக இருந்தாலும் சரி, தும்பத்தில் இருந்தாலும் சரி, மகிழ்ச்சியில் இருந்தாலும் சரி நாம் அதை பகிர்ந்து கொள்வது இசை மூலம். அதுமட்டும் அல்ல, ஒருவர் மன அழுத்தத்தில் இருக்கும் போது புல்லாங்குழல், வயலின் போன்ற இனிமையான இசைகளை கேட்கும் போது அவர்கள் மன அமைதி பெறுவதாக அறிவியல் ரீதியிலாக நிரூபணமாகியுள்ளது. 


இந்நிலையில், சமீபத்தில் வயலின் ஒலியால் ஈர்க்கப்பட்ட ஒரு குறுநடை போடும் குழந்தையின் அழகிய வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த குழந்தை முதல் முறையாக ஒரு வயலின் இசையை கேட்ட பிறகு அந்த இசையால் ஈர்க்கப்பட்டு, மகிழ்ச்சியடையும் குழந்தையில் வீடியோ அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 


அந்த வீடியோவை அந்த குழந்தையின் தாயார் ரேச்சல் ஆட்ரி தஹ்னது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  அந்த வீடியோவை இதுவரையில் சுமார் 3 மில்லியன் பார்வையாளர்கள் கண்டுள்ளனர். மேலும், அந்த வீடியோவை 39,711 retweets செய்துள்ளனர்.



அவர் பதிவிட்ட வீடியோவில், 11 மாத வயது குழந்தை எலும்பிச்சை நிற ஆடை அணிந்து நின்று கொண்டிருக்கிறது. அந்த குழந்தையின் முன் ஒரு பெண் வயலின் வாசித்து கொண்டிருக்கிறார். இதை தொடர்ந்து, அந்த குழந்தை அந்த பெண்ணின் அருகில் போய் நின்று அந்த வயலின் இசையில் மதிமயங்கி அப்படியே நின்று அவரை உன்னித்து கவனிக்கிறது. பின்னர், அந்த பெண் பின்னோக்கி செல்ல, அந்த குழந்தை அவரது அருகில் சென்று அவரது கால்களை கட்டியணைக்கிறது. பின்னர், மீண்டும் தரையில் அமர்ந்து அவரை கண்சிமிட்டமால் பார்த்துக்கொண்டிருக்கிறது. பின்னர் அந்த பெண் தனது முகத்தில் ஒரு பெரிய புன்னகையுடன் தனது இசையை நிறுத்துகிறார். இந்த வீடியோ அப்பாவி குழந்தையின் செயல் மக்களை அடடா என பிரமிக்க வைத்துள்ளது. 


மார்ச் மாதத்தில் ட்விட்டரில் பகிர்ந்த இந்த வீடியோவிற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களின் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். அவற்றில் சில கருத்துக்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.