Watch Viral Video: தண்ணீர் தொட்டியில் கும்மாளம் போடும் குட்டி யானை..!!!
குட்டி யானைகள் பெரும்பாலும் தண்ணீரில் கொட்டமடிக்கும். ஆனந்தமாய் விளையாடும். இந்த வீடியோவிலும் இதே போல் விளையாடுவதைக் காணலாம்.
புதுடில்லி: சிங்கங்கள், யானைகள் போன்ற விலங்குகளின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் எப்போதுமே வைரலாகி வரும். இப்போது ஒரு அழகான குட்டி யானையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ அனைவரையும் கவர்ந்துள்ளது. இதை பார்த்தால் நீங்கள் சிரிக்காமல் இருக்கவே முடியாது. தண்ணீர் தொட்டியில் ஆனந்தமாய் குளிக்கும் இந்த யானையின் வீடியோவை இந்திய வன துறை அதிகாரி ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
குட்டி யானைகள் பெரும்பாலும் தண்ணீரில் கொட்டமடிக்கும். ஆனந்தமாய் விளையாடும். இந்த வீடியோவிலும் இதே போல் விளையாடுவதைக் காணலாம். இந்த வீடியோ இணையத்தில் மிகவும் வைரலாகிறது (Viral VIdeo).
வீடியோவில் நீர் தொட்டி நிரம்பியிருப்பதைக் காணலாம். யானைக் குட்டி குதித்து தொட்டியில் ஏறுகிறது. அதில், அதில் ஆனந்தமாக குளிக்கத் தொடங்குகிறார். இந்த வீடியோவை இந்திய வன துறை அதிகாரி (ஐ.எஃப்.எஸ்) பர்வீன் கஸ்வான் பகிர்ந்துள்ளார். மேலும் தலைப்பில், அவர் Just a bag full of happiness. A forward என எழுதினார்.
ALSO READ | தண்ணீரில் கண்டம் என கணித்த டாக்டர்கள்.... தவிக்கும் இளம் பெண்..!!!
இந்த வீடியோவை நவம்பர் 25 அன்று பகிர்ந்துள்ளார், இது இதுவரை 56 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது. மேலும், 5000 க்கும் மேற்பட்ட லைக்குகளும், 500 க்கும் மேற்பட்ட மறு ட்வீட்டுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த வீடியோவை மக்கள் மிகவும் ரசிக்கிறார்கள்.
இந்திய வன சேவை (ஐ.எஃப்.எஸ்) அதிகாரி பர்வீன் கஸ்வான் தனது ட்விட்டர் கணக்கில் இதுபோன்ற அழகான வீடியோக்களை அடிக்கடி பகிர்ந்து கொள்கிறார். சமூக ஊடக பயனர்களும் அவரது வீடியோவை மிகவும் ரசிக்கிறார்கள்.
ALSO READ | 15 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்த தாய்... சாத்தியமாக்கியது FaceBook..!!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR