மிருகக்காட்சி சாலையில் கரடி ஒன்று பார்வையாளர்களிடம் கையசைத்து உணவு கேட்கும் வீடியோ வைரலாகி வருகிறது..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகலாவும் இருக்கலாம். அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம் மூலம் நம்மிடம் வந்து சேர்க்கிறது. அது வாழ்நாளில் நம்மால் மறக்க முடியாத நிகழ்வாக கூட அமையலாம். இந்நிலையில், மிருகக்காட்சி சாலையில் கரடி ஒன்று பார்வையாளர்களிடம் கையசைத்து உணவு கேட்கும் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோ கிளிப் நெட்டிசன்களை மயக்கிவிட்டது. 


பொதுவாக விலங்குகள் மிகவும் புத்திசாலித்தனமான மற்றும் மகிழ்ச்சிகரமான உயிரினங்கள் என்பதை இந்த கிளிப் சரியாக நிரூபிக்கிறது. சுமார் 8 விநாடிகளை கொண்ட இந்த வீடியோவில் ஒரு பெரிய கரடி நீர்நிலையின் விளிம்பில் உள்ள படிக்கட்டுகளில் அமர்ந்திருப்பதைக் காட்டுகிறது. இதையடுத்து, அந்த கரடி பார்வையாளர்களை பார்த்து தனது கைகளையும், கால்களையும் நளினமாக அசைத்து உணவு கேட்பது போல் தோன்றுகிறது. இதை கண்ட பார்வையாளர்கள் சில வேறு திசையில் உணவை வீசும்போது, விலங்கு சிறிது நகர்ந்து உணவை அதன் வாயால் சரியாக பிடிக்கிறது.


ALSO READ | டால்பின் சிரிக்குமா?.... இந்த கேள்விக்கான ஆதார வீடியோ இதோ..!



நிச்சயமாக இதற்கு முன்பு இது போன்ற எதையும் நாங்கள் பார்த்ததில்லை. அதனால் தான், கிளிப் பகிரப்பட்டவுடன் வைரலாகியது. இது வரை இந்த வீடியோ 58.1k க்கும் மேற்பட்ட பார்வைகளையும் நிறைய கருத்துகளையும் பெற்றது. ஒரு பயனர் எழுதினார், "அவர் ஏற்கனவே தனது நண்பர்களைப் பார்த்திருக்கிறார். அவர்களை அழைக்கிறார் என்று நினைக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோக்கு இதுவரை 3.9K லைக்குகளையும், சுமார் 69.1K பார்வையாளர்களையும் பெற்றுள்ளது.