புவனேஷ்வரில் வாடிக்கையாளர்களுக்கு உணவு வழங்க 2 ரோபோக்களை ‘ரோபோ செஃப்’ அறிமுகம்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் உள்ள உணவகம் ஒன்றில் முதல்முறையாக வாடிக்கையாளர்களுக்கு உணவு வழங்க 2 ரோபோக்களை ‘ரோபோ செஃப்’-களாக அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த இரண்டு ரோபோக்களும் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டவை. சம்பா மற்றும் சம்மேலி என பெயரிடப்பட்டுள்ள இந்த இரண்டு ரோபோக்களும் ராடார் சிக்னல்கள் மூலம் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் ஒடியா உள்ளிட்ட பல்வேறு மொழிகளையும் பேசும் வகையிலான கட்டளைகளுடன் இவை தயாரிக்கப்பட்டுள்ளன.


இதுகுயர்த்து உணவாக உரிமையாளர் கூறுகையில்; "எங்கள் உணவகம் தான் கிழக்கு இந்தியாவின் முதல் ரோபோ உணவகம். இந்த இரண்டு ரோபோக்களும் ராடாரை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகின்றன. இதற்க்கு என குறிப்பிட்ட பாதை இல்லை. அவை கட்டளைப்படி செயல்படுகின்றன, மேலும் ஒடியா உட்பட எந்த மொழியையும் அதனால் பேச முடியும்." என அவர் தெரிவித்தார். 



மேலும், 'சம்பா மற்றும் சாமேலி' என்ற இரண்டு ரோபோக்களுடன், இந்த இடம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்க தயாராக உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.