புதுச்சேரி: நமது ஆரோக்கியத்திற்கு உடற்தகுதி மிகவும் முக்கியமானது. தினசரி உடற்பயிற்சிகள் செய்து, சத்தான உணவை உண்டால் நல்ல உடல் ஆரோக்கியம் இருக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாகும் தற்போது, உடற்தகுதி, ஆரோக்கியம் குறித்து அதிகம் பேசப்படுகிறது. இந்த சந்தர்ப்பத்தில் நீருக்கடியில் உடற்தகுதிக்கான பயிற்சியில் ஈடுபடும் diver ஒருவரின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகிறது.



பயிற்சி பெற்ற diver என கூறப்படும் அரவிந்த் என்ற நபர், கண்களை பாதுகாக்கும் கவசம் அணிந்துக் கொண்டு கடலின் அடியில் அதாவது கடல் படுகையில் உடற்பயிற்சி செய்வதைக் காணலாம்.


கோவிட் -19 இன் இரண்டாவது அலை, சுனாமியாக மக்களை தாக்கி வரும் நிலையில், கடலுக்குள் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஆச்சரியமாக இருக்கிறது. நல்ல நோயெதிர்ப்பு சக்தியுடன் ஆரோக்கியமாக உடலைப் பராமரிப்பதன் அவசியத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் நோக்கத்தில் புதுச்சேரியைச் சேர்ந்த அரவிந்த் ஈடுபட்டுள்ளார். 


Also Read | Chennai: ஜூஸ் பவுடரில் 2.5 கிலோ தங்கத் துகள்கள் கடத்தல் 


நீருக்கடியில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி, வைரலாகிறது. ட்விட்டரில் வெளியான வீடியோவை பார்க்கும் அனைவரும் லைக் செய்யாமல் இருக்க முடியவில்லை என்று சொல்கின்றனர்.
 
வீடியோவில், பயிற்சி பெற்ற முக்குளிக்கும் (trained diver) அரவிந்த் என்ற இளைஞர், கண்களை பாதுகாக்கும் கவசத்தை அணிந்து கடல் படுகையில் உடற்பயிற்சிகளை செய்கிறார். இதற்காக அரவிந்த் 14 மீட்டர் ஆழத்தில் சென்றுள்ளார். 
அரவிந்த் கடந்த 20 ஆண்டுகளாக சென்னை மற்றும் புதுச்சேரி கடற்கரையில் டைவிங் பிரச்சாரங்களை (diving campaigns) நடத்தி வருகிறார்.


அரவிந்த் நீருக்கடியில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை உள்ளூர் பத்திரிகையாளர் பிரமோத் மாதவ் வெளியிட்டார், "புதுச்சேரியிலிருந்து வந்த மனிதன் 14 மீட்டர் ஆழமான நீரில் உடற்பயிற்சி செய்கிறார், தொற்றுநோய்களின் போது உடற்பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்துகிறார்" என்று தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் நூற்றுக்கணக்கானவர் பார்த்து ரசித்துள்ளனர்.


Also Read | MDMK: ஏழு தமிழர்களை விடுதலை செய்க! வைகோ வேண்டுகோள்


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR