Black Friday என்றால் என்ன? இந்த நாளில் தொழில் செய்தால் அதிக லாபமா?
Black Friday Meaning : கடந்த சில நாட்களாகவே, அமேசான், ஃப்ளிப் கார்ட் போன்ற பல்வேறு நிறுவனங்கள் ‘Black Friday Sale’ என்ற பெயரில், சில ஆஃபர்களை கொடுத்து, வாடிக்கையாளர்களை தன் பக்கம் ஈர்த்து வருகிறது. இதற்கு பின்னால் இருக்கும் அர்த்தம் என்ன?
Black Friday Meaning : கடந்த சில வாரங்களாக, "Black Friday Sale" என்ற வாசகத்தை நாம் பயன்படுத்தும் சமூக ஊடகங்கள் மூலமாக பார்த்திருப்போம். தீபாவளி, பொங்கல், The Great Indian Festival போன்ற பண்டிகை காலங்களில் ஆஃபர் போடும், அமெசான், ஃப்ளிப்கார்ட் போன்ற ஆன்லைன் வணிக வர்த்தகங்கள், Black Friday Sale, என்ற பெயரிலும் தள்ளுபடிகளை அள்ளி வழங்கி, பொருட்களை விற்க ஆரம்பித்தன. இது குறித்து வெளிநாட்டினருக்கே பெரிதாக தெரியாது. ஆனால், நாம் தெரிந்து கொள்ளலாம் அல்லவா? Black Friday Sale-ற்கு பின்னால் இருக்கும் அர்த்தம் மற்றும் வரலாறு குறித்து இங்கு பார்ப்போம்.
Black Friday என்றால் என்ன?
நம் நாட்டில் கொண்டாடப்படும் பண்டிகைகள் ஏராளமாக இருப்பினும், வெளிநாடுகளில் கொண்டாடப்பட்டு வந்த பண்டிகைகள் குறித்தும் நாம் நன்கு அறிந்து வைத்திருக்கிறோம். அப்படிப்பட்ட பண்டிகைகளுள் ஒன்று, Thanksgiving.இந்த பண்டிகையை, அமெரிக்காவில் விமரிசையாக கொண்டாடுவர். ஒரு ஆண்டில், தனக்கும், தன்னை சுற்றி இருப்பவர்களுக்கும் என்னென்ன நல்ல விஷயங்கள் நடந்ததோ, அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு அடுத்து வரும் வெள்ளிக்கிழமைதான், Black Friday என்று கொண்டாடப்படுகிறது.
Thanksgiving நாளில், அமெரிக்கர்கள் வரவிருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புது வருடத்திற்காக ஷாப்பிங் செய்ய துவங்குவர். இதனால், வணிகர்கள் பலர் பலவித தள்ளுபடிகள் வழங்கி தங்கள் விற்பனையில் லாபம் பார்ப்பர். தெரு வீதிகளில் மட்டுமன்றி, ஆன்லைனிலும் இது போன்ற தள்ளுபடிகள் வழங்கப்பட்டு விற்பனைகள் நடைபெறும்.
வணிகர்களுக்கான நாளாக மாறியது எப்படி?
1950களில், அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் பலரும் எதிர்பார்த்த ஒரு கால்பந்து விளையாட்டு போட்டி நடைப்பெற்றது. இது நடந்தது, ஒரு Thanksgiving நாளுக்கு அடுத்த நாள், வெள்ளிக்கிழமையில். பண்டிகை சீசன் ஆரம்பித்ததால், ஷாப்பிங் சென்றவர்கள், அந்த இடத்தை சுற்றி பார்க்க வந்தவர்கள், விளையாட்டு போட்டியை பார்க்க வந்தவர்கள், ஒரே இடத்தில் சூழ்ந்து கொண்டதால், அந்த நகர் முழுவதும் அன்று பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விட்டது. போலீஸார் எவ்வளவு முயற்சித்தும், இந்த போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.
இதனால், பிலடெல்பியா நகர காவலர்கள், இந்த நாளை Black Friday என்று குறிப்பிட்டனர். அது மட்டுமல்ல, அன்றைய அமெரிக்கர்கள் தங்களின் லாப-நஷ்ட கணக்குகளை ஒரு புத்தகத்தில் எழுதி வைப்பர். இதில், தங்கள் தொழிலில் ஏற்பட்டிருக்கும் நஷ்டங்களை, சிகப்பு பக்கத்திலும், லாபங்களை கருப்பு நிறத்திலும் எழுதுவார்களாம். ப்ளாக் ஃப்ரைடே நாளில், அவர்கள் கருப்பு நிறத்தில் அதிகமாக எழுதியிருக்கின்றனர். இதற்கு அர்த்தம், அவர்களுக்கு அந்த நாளில் லாபம் அதிகரித்திருக்கிறது என்பதுதான். எனவே, இந்த காரணத்திற்காகவும் Black Friday Sale தோன்றியது.
Black Friday Sale ஏற்படுத்திய தாக்கம்:
இந்த நாளில் விற்பனை செய்பவர்களுக்கு நம்ப முடியாத அளவிற்கு லாபம் கிட்டி வருகிறது. இது, ஒருவரின் தனிப்பட்ட பொருளாதார மாற்றமாக மட்டுமன்றி, ஒட்டுமொத்தமாக நாட்டின் முன்னேற்றத்திற்கான மாற்றமாகவும் இருக்கிறது.
முன்னர் அமெரிக்காவில் மட்டும் ஆரம்பித்த இந்த ட்ரெண்ட், இப்போது பல்வேறு உலக நாடுகளுக்கு பரவி இருக்கிறது. இதனால், பல தொழில் முனைவோர்கள் பயனடைகின்றனர். இந்த வருடம், நவம்பர் 29ஆம் தேதி Black Friday கொண்டாடப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ