எந்தெந்த நாடுகளில் எந்தெந்த நேரங்களில் புத்தாண்டு பிறக்கும்!!
2020-ஆம் ஆண்டில் எந்தெந்த நாடுகளில் எந்தெந்த நேரங்களில் புத்தாண்டு பிறக்கிறது என்று பார்க்கலாம்.
2020-ஆம் ஆண்டில் எந்தெந்த நாடுகளில் எந்தெந்த நேரங்களில் புத்தாண்டு பிறக்கிறது என்று பார்க்கலாம்.
2019 முடிவடைந்து, புதிய ஆண்டான 2020 வரும் ஜனவரி 1-ஆம் தேதி வரவுள்ளது. 2020 ஆண்டை வரவேற்க உலகமே மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது. இதற்காக தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறும். பல இந்து கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும்.
மெரினா கடற்கரையில் கூடுபவர்கள் நள்ளிரவு சரியாக 12 மணிக்கு ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக கேக் வெட்டி, பட்டாசு வெடித்து, பலூன்கள் பறக்கவிட்டு புத்தாண்டை வரவேற்பார்கள். அதேசமயம் சிலர் சென்னை நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் பல்வேறு இடங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டம் வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.
அந்த வகையில் உலக முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஏற்ற சிறப்பு மிக்க இடங்கள் பல உள்ளன. ஜனவரி 1-ஆம் தேதியை புத்தாண்டாக அறிவித்தவர் ஜூலியஸ் சீசர்.
இந்நிலையில் 2018-ஆம் ஆண்டு முதன்முதலில் புத்தாண்டு பிறக்கும் நாடு எது என்றும் கடைசி எது என்றும் பார்க்கலாம்.
● ஆங்கில புத்தாண்டு முதல் முதலில் பிறகும் இடம் சாமோவோ மற்றும் கிறிஸ்துமஸ் தீவு / கிரிபேட்டி (இந்திய நேரம் - டிசம்பர் 31, மாலை 3:30 மணிக்கு).
● நியூசிலாந்தின் ஆக்லாந்தில் இன்று மாலை சரியாக மாலை 4.30 மணி அளிவில் புத்தாண்டு பிறந்தது.
● ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னியில் இந்திய நேரப்படி மாலை 6.30 மணியளவில் புத்தாண்டு பிறந்தது.
● ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு புத்தாண்டு பிறந்தது.
● ஹாங்காங்கில் இரவு 9.30 மணியளவில் 2016 ஆண்டு பிறப்பு கொண்டாட்டங்கள் தொடங்குகின்றன.
● இந்தோனேஷியாவின் தலைநகரான ஜகார்த்தாவில் இரவு 10.30 மணிக்கு புத்தாண்டு பிறக்கிறது.
● அதன் தொடர்ச்சியாக நள்ளிரவு 12.00 மணியளவில் இந்தியாவின் முக்கிய நகரங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடங்க உள்ளன.
● அதிகாலை 1.30 மணியளவில் அரபு நாடான துபாயில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடங்கும்.
● அதிகாலை 2.30 மணிக்கு ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிலும்
● அதிகாலை 3.30 மணிக்கு, துருக்கியின் இஸ்தான்புல் நகரத்திலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடங்க உள்ளன.
● ஜெர்மனி தலைநகர் பெர்லின் நகரில் அதிகாலை 4.30 மணியளவில் புத்தாண்டு ஆரம்பிக்கும்.
இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணியளவில் லண்டன் மாநகரில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடங்கும்.
● அதன் தொடர்ச்சியாக காலை 7.30 மணியளவில் பிரேசிலின் ரியோடி ஜெனிரோவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடங்க உள்ளன
● காலை 10.30 மணிக்கு அமெரிக்காவின் நியூயார்க் நகரிலும்
● காலை 11.30 மணிக்கு மெக்சிகோவிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடங்க உள்ளன.
மேலும் உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.