Why Women Like Elder Men ? ஆண்-பெண்ணிற்குள் வரும் காதல் என்பது, எந்த காலத்தில், எந்த நேரத்தில், எதை பார்த்து வரும் என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. ஆனால், பெரும்பாலான காதல் உறவுகளை பார்க்கும் போது அதில் இருக்கும் ஆண், பெண்ணை விட வயதில் அதிகமானவராக இருப்பார். ஒரு சில உறவுகளில் இது வேறுபடலாம். ஆனால், பெரும்பாலான பெண்கள் தன்னை விட வயதில் அதிகமாக இருப்பவர்களை தேர்ந்தெடுப்பது ஏன்? இங்கு அதற்கான காரணங்களை பார்க்கலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதிர்ச்சி:


பெண்கள், தன்னை விட வயது அதிகமாக இருக்கும் ஆண்களுக்கு மனதளவில் முதிர்ச்சி இருக்கும் என்று நினைக்கின்றனர். ஏனென்றால், ஆண்கள் தன்னை விட வயதில் அதிகமானவராக இருப்பதால் அவர்களுக்கு வாழ்வில் அதிக அனுபவம் இருக்கும் என்றும், இதனால் பல விஷயங்களை அவர்கள் புரிந்து வைத்திருப்பர் என்றும் நினைக்கின்றனர். தன்னை விட வயதில் முதிர்ந்த ஆண்களை பெண்கள் தேர்ந்தெடுக்க, இதுவும் ஒரு காரணம் ஆகும். 


நிதி பாதுகாப்பு:


ஒரு சில சமயங்களில், அதிக வயதுடையவர்கள் அதிகம் சம்பாதிப்பவர்களாக இருப்பர். தனது தொழில் அல்லது வேலையில் அனுபவம் வாங்கியவராகவும், வாழ்வில் ஓரளவிற்கு செட்டில் ஆனவராகவும் இருப்பர். பெண்கள் பலருக்கு, நிதி குறித்த பயம் இல்லாமல் இருப்பர்.


அனுபவம் மற்றும் அறிவு:


வயது அதிகமானவர்களுக்கு கண்டிப்பாக வாழ்வில் அதிக அனுபவம் இருக்கும். அந்த அனுபவத்தால் அவர்கள் பெரும் அறிவு பலருக்கு பயனுள்ளதாகவும் இருக்கும். இந்த அனுபவ-அறிவால் பெண்கள் பலர் பெரிதும் ஈர்க்கப்படுவர். இதுவும், அவர்கள் தன்னை விட வயதில் முதிர்ந்த ஆணை தேர்ந்தெடுப்பதற்கான ஒரு பெரிய காரணம் ஆகும். 


தன்னம்பிக்கை மற்றும் சுய விழிப்புணர்வு:


வயது ஏறும் போது, பல விஷயங்களை கற்றுக்கொள்வோம். இப்படி கற்றுக்க்கொள்ளும் விஷயங்களால் நமக்கு அனுபவம் கூடி, தன்னம்பிக்கையும் தைரியமும் பிறக்கும். இதனால், ஆண்கள் அவர்கள் செய்யும் வேலைகளில் முன்னோடியாக இருப்பதோடு, ஒரு காதல் உறவு என்று வந்துவிட்டால் அதிலும் அனைத்தும் கற்றவர்களாக இருப்பர். அது மட்டுமன்றி, தான் என்ன செய்கிறோம், அதை சரியாகத்தான் செய்கிறோமா என்பது குறித்த சுய விழிப்புணர்வும் சில வயது முதிர்ந்த ஆண்களுக்கு இருக்கும். இது, பெண்களை ஈர்க்கும் ஒரு பெரிய குணாதிசயமாக பார்க்கப்படுகிறது. 


வாழ்க்கையில் உள்ள மதிப்புகள்-முன்னுரிமைகள்:


வயது அதிகமான ஆண்களின் வாழ்வில், இளம் வயதினருக்கு இருப்பது போல அல்லாமல், வெவ்வேறு வகையிலான முன்னுரிமைகள் இருக்கும். உதாரணத்திற்கு, இளம் வயதில் இருக்கும் ஆண்களுக்கு அவர்களின் இலக்குகள் அனைத்தும் மிகவும் குறுகிய காலத்திற்கு ஏற்றது போல இருக்கும். ஆனால், வயதில் மூத்த ஆண்களின் இலக்குகள் பெரிதாகவும், நீண்ட காலத்திற்கு ஏற்றதாகவும் இருக்கும். அதுவும், அந்த இலக்குகள் நிலையானதாக இருக்கும். இந்த குணம், பெரும்பாலான பெண்களை ஈர்க்கும். பெண்கள், இந்த குணாதிசயம் தனது பார்ட்னரிடம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பர். 


மேலும் படிக்க | தன்னை விட வயது அதிகமான பெண்களை விரும்பும் ஆண்கள்! காரணம் இதுதான்..


டிராமா இல்லாமல் இருக்கும்:


இளம் வயதில் இருக்கும் பெரும்பாலானோருக்கு வாழ்வின் மீதுள்ள புரிதல் என்பது மிகவும் குறைவாகவே இருக்கும். அதிலும் ஆண்கள் பலர் தனது ஒரு குறிப்பிட்ட வயது வரை, தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை கண்டுகொள்ளமலேயே இருப்பர். இதனால், அவர்களுடன் காதல் உறவில் இருக்கும் போது பெண்கள் பலர் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்வர். இந்த டிராமாக்கள், பெரும்பாலான வயது முதிர்ந்த ஆண்களிடம் இருக்காது. எனவே, அவர்கள் அதிகமாக இருக்கும் ஆண்களை தேர்ந்தெடுக்கின்றனர். 


வாழ்வில் வழிகாட்ட ஒருவர்:


ஒரு சில பெண்கள், வாழ்க்கை துணையாக வரும் நபர் தனக்கு தெரியாத விஷயங்களை அவர் சொல்லிக்கொடுக்க வேண்டும் என்று நினைப்பர். அது மட்டுமன்றி, வயதில் அதிகமான ஆண்களிடம்தான் பல பெண்கள் பாதுகாப்பாக உணருவர். இது, அவர்களை ஒரு தனி மனிதராக வளர தூண்டுவதோடு, அந்த உறவையும் அடுத்த படிக்கு அழைத்து செல்லும். 


மேலும் படிக்க | ஆண்களே..! காதலிக்கும் போது ‘இந்த’ 4 தவறுகளை மட்டும் செய்து விடாதீர்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ