Disrespecting Culture: சப்தபதி சடங்குடன் செய்த திருமணம் ‘கலாச்சார அவமதிப்பு?’ குமுறும் நெட்டிசன்கள்!
நல்ல நாள் பார்த்து, சடங்கு சம்பிரதாயங்களுடன் செய்யப்பட்ட ஒரு திருமணத்தின் வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள் கலாசார அவமதிப்பு என்று குமுறுகின்றனர். ஆச்சரியமாக இருக்கிறதா?
புதுடெல்லி: நல்ல நாள் பார்த்து, சடங்கு சம்பிரதாயங்களுடன் செய்யப்பட்ட ஒரு திருமணத்தின் வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள் கலாசார அவமதிப்பு என்று குமுறுகின்றனர். ஆச்சரியமாக இருக்கிறதா?
மணமகனும், மணமகளும் திருமண சடங்கு நடைபெறும் போது மகிழ்ச்சியுடன் நடனமாடுகின்றனர். இதில் என்ன இருக்கிறது. இப்போது அது பேஷன் தானே என்று புருவம் உயர்கிறதா? இந்த வீடியோவைப் பாருங்கள், பார்த்த பிறகு உங்கள் எண்ணம் என்ன என்று சொல்லுங்கள்…
சர்ச்சைக்குரிய இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் வீடியோ மகிழ்ச்சியால் வைரலாகவில்லை. சமூக ஊடகத்தில் சர்ச்சைக்குரிய விஷயமாக மாறியுள்ளது.
Also Read | ஸ்ரீ ராமஜெயம் என்று மனதால் ஜெபிப்பதைவிட, 108 முறை எழுதுவது அதிக பலன் தருமா?
பிர்லா குழுமத்தின் நிறுவனங்களில் ஒன்றான Birla Precision Technologies எம்.டி.யுமான வேதந்த் பிர்லா பகிர்ந்து கொண்ட வீடியோ ட்விட்டரில் வைரலாகிறது. கலாசாரத்தை அவமதித்ததாக அவர் விமர்சிக்கிறார்.
இந்துக்களின் திருமண சடங்குகளில் முக்கியமானது சப்தபதி என்னும் சடங்கு. திருமண நிகழ்வு சப்தபதி சடங்கு செய்தால் பூர்த்தியாகும் என்பது ஆழமான நம்பிக்கை. நீதிமன்ற வழக்கு ஒன்றில் சப்தபதி சடங்கு செய்தால், திருமணம் பூர்த்தியானதாக எடுத்துக் கொள்ளலாம் என்று கூறும் அளவுக்கு இந்த சடங்கு முக்கியத்துவம் வாய்ந்தது.
இந்து திருமணங்களின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றான சப்தபதி, வேத மந்திரங்களுக்கு மத்தியில் அக்னியை சாட்சி வைத்து, மணமக்கள், தாங்கள் திருமண பந்தத்தில் இணைவதாக ஒப்புக் கொள்கின்றனர். இருவரும் இணைந்து ஏழு அடிகள் எடுத்து வைத்தால் தான் இந்த சடங்கு பூர்த்தியடையும்.
Also Read | திருமணத்தில் தாலி கட்டும்போது மூன்று முடிச்சு போடுவது ஏன்?
வேதாந்த் பிர்லா பகிர்ந்த வீடியோவில், மணமகனும், மணமகளும் சப்தபதி சடங்கின்போது இந்தி பாடல் ஒன்றுக்கு நடனமாடுவதைக் காண முடிகிறது. திருமணத்திற்காக கூடியிருந்த விருந்தினர்களும் தம்பதிகளை உற்சாகப்படுத்தினர்.
இந்த வீடியோவை பகிர்ந்த வேதாந்த் பிர்லா,“இது இது திருமணமா அல்லது நமது பாரம்பரிய விழுமியங்களை தியாகம் செய்வதை காட்டும் வீடியோவா? இந்த உலகில் நாம் மதிக்கப்படுகிறோம் என்றால், அது நமது கலாச்சாரம் மற்றும் விழுமியங்களால் தான் என்பதை மறந்துவிடாதீர்கள்” என்று எழுதியுள்ளார்.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானதும், 6000 முறை மீண்டும் பகிரப்பட்டது, 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளையும் பெற்றது. வைரலான இந்த வீடியோவைப் பற்றிய விமர்சனங்கள், இந்திய கலாசாரச் சிதைவை நோக்கிய மக்களின் வருத்தத்தை பதிவு செய்வதாக இருக்கிரது. இதுபோன்ற நடத்தை, "அருவருப்பானது" மற்றும் "அவமரியாதையானது" என்பது போன்ற கருத்துக்களை பலரும் வெளியிட்டனர்.
Also Read | Master Director பகிர்ந்துக் கொண்ட Climax காட்சியின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரல்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR