நம் அனைவர் நண்பர் கூட்டத்திலும் ஒரு நபர் இருப்பார். காதலிப்பவர்களுக்கு, காதலில் தோற்றவர்களுக்கு, காதலில் வெற்றி பெற நினைப்பவர்களுக்கு, காதல் என்றால் என்னவென்றே தெரியாதவர்களுக்கு என அனைவருக்கும் நல்ல நல்ல ரிலேஷன்ஷிப் அட்வைஸ் கொடுப்பார். ஆனால், அவர் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் எப்படி இருப்பார் தெரியுமா? முரட்டு சிங்கிளாக! பிறகு எப்படி இவர்களால் எப்படி நல்ல காதல் அட்வைஸ்களை கொடுக்க முடிகிறது? இவர்கள் முரட்டு சிங்கிளாக இருப்பது ஏன்? இது குறித்து விளாவாரியாக இங்கு பார்ப்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உறவுகள் குறித்த அனுபவம்:


இவர்களுக்கு ஏற்கனவே உறவுகள் குறித்த நல்ல அனுபவங்கள் இருக்கும். இவர்களது வாழ்வில் இருக்கும் நண்பர்களோ, உறவினர்களோ, குடும்பமோ இவர்களுக்கு காதல் உறவு ஒன்று இல்லை என்ற உணர்வை கொடுக்காமல் இருந்திருப்பர். இதனால் அவர்கள் சிங்கிளாக இருப்பர்.


தனிப்பட வளர்ச்சி:


நல்ல காதல் அட்வைஸ் கொடுப்பவர்கள் சிங்கிளாக இருப்பதற்கு இன்னும் சில காரணங்களும் இருக்கின்றன. இவர்கள் தங்களின் தனிப்பட்ட வளர்ச்சியில் கவனம் செலுத்துபவர்களாக இருப்பர். இதனால் அவர்களுக்கு காதல் உறவுக்கான வேலையே இருக்காது. 


உறவுகள் குறித்த தரநிலைகள்:


சிங்கிளாக இருக்கும் இவர்களுக்கு தங்களுக்கு வரவேண்டிய பார்ட்னர்கள் இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்பது போன்ற தரநிலைகள் இருக்கும். இதனால், தனது தரத்தை சந்திக்காத நபர்களை தேர்ந்தெடுக்க இவர்கள் விரும்ப மாட்டார்கள். அப்படியே யார் கையிலாவது காதல் உறவில் மாட்டினாலும் நெடு நாட்களுக்கு அந்த உறவில் இருக்க மாட்டார்கள்.


முந்தைய அனுபவங்கள்:


சிங்கிளாக இருந்து, நல்ல ரிலேஷன்ஷிப் அட்வைஸ் கொடுப்பவர்களுக்கு காதல் அனுபவம் கசப்பானதாக இருந்திருக்கும். இதனால், அவர்கள் அதே போல தவறான ஒரு உறவில் இருப்பதை தவிர்ப்பர். 


உறவுகளில் நிபுணத்துவம்:


இவர்கள், உறவுகளில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களாக இருப்பர். இவர்கள், ஒரு உறவை அனைத்து கண்ணோட்டங்களில் இருந்தும் பார்ப்பவர்களாக இருப்பர். எனவே, தன் தனிப்பட்ட அனுபவத்தில் இருந்து மட்டும் ஒருவருக்கு அட்வைஸ் கூறாமல், பிறரின் அனுபவங்களை வைத்தும் பாடங்களை கற்றுக்கொள்வர். 


சுதந்திர அனுபவத்திற்கான ஆசை:


இவர்கள், உறவு என்ற ஒன்றில் இருந்துவிட்டால் தனக்கான் சுதந்திரம் பரிபோய் விட்டதாக நினைப்பர். இதுவே இவர்களுக்கு வாழ்வில் போதுமானதாக இருக்கும். எனவே, காதல் அனுபவம் பெறுவதற்கான ஆசையே இருக்காது. 


மேலும் படிக்க | திருமண வாழ்க்கையில் காதல் மட்டும் போதாது, இந்த விஷயங்களும் முக்கியம்


வாழ்க்கை மதிப்புகள்:


பலர், தனக்கென வாழ்வில் ஒரு தனி மதிப்புகளையும் மரியாதைகளையும் வைத்திருப்பர். அப்படி அதே போன்ற மதிப்புகளை வைத்திருப்பவர்களை இவர்கள் சந்திக்காமல் இருப்பர். இப்படி, தன்னுடன் செட் ஆகாத நபருடன் வாழ்வதற்கு சிங்கிளாகவே இருந்து கொள்ளலாம் என முடிவெடுத்து சிங்கிளாக இருப்பர். 


பிறருக்கு உதவுதல்:


ரிலேஷன்ஷிப் அட்வைஸ் கொடுப்பவர்களுக்கு, பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கும். எனவே, தனக்கான ஒரு காதல் உறவை தேடுவதை விட்டுவிட்டு, பிறருக்கு காதல் அட்வைஸ்களை கொடுத்து கொண்டிருப்பர். 


மேலும் படிக்க | காதலில் செய்யவே கூடாத தவறுகள்! ‘இதை’ செய்தால் அப்பறம் எல்லாம் புட்டுக்கும்..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ