Why Indian Women Like Korean Men : கொரியன் சீரிஸ்களும், படங்களும், பாடல்களும் இந்தியாவில் மிகவும் பிரபலம். இதற்கு பெரும்பாலும் காரணமாக அமைந்திருப்பது, பிடிஎஸ் என்ற கொரிய இசை குழு என்று கூறப்படுகிறது. ஆனால், பல பெண்கள் பிடிஎஸ்-ஐ தாண்டி பல கொரிய ஆண்களை விழுந்து விழுந்து ரசிக்கின்றனர். இதற்கு காரணம் என்ன தெரியுமா? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கலாச்சார மோகம்:


கொரியாவில் இருக்கும் பாப் கலாச்சாரம் பெண்களை பெரிதாக ஈர்க்கும் வகையில் இருக்கிறது. கொரிய டிராமாக்கள், பாடல்கள் ஆகியவை இந்தியாவில் பிரபலமாக இருக்கின்றன. இதில், கொரிய ஆண்களை பார்க்கும் பெண்கள் அவர்கள் ரியல் வாழ்க்கையிலும் இப்படித்தான் இருப்பதாக நினைத்துக்கொண்டு அவர்களை ரசிக்கின்றனர். 


பேஷன்:


கொரிய ஆண்கள், தங்களை அழகுப்படுத்தி கொள்வதில் அதிக அக்கறை காட்டுகின்றனர். அவர்களின் உடை, நடை என அனைத்துமே ஸ்டைலாகவும், பேஷனாகவுமிருப்பதால் அது பெண்களை வசீகரிக்கும் வகையில் இருக்கிறது. 


அடக்கம்-மரியாதை:


கொரிய ஆண்கள், பிறரிடம் மிகவும் அடக்கத்துடனும் மரியாதையுடனும் நடந்து கொள்கின்றனர். ஆனால், நம் நாட்டு பெண்கள் பார்க்கும் பெரும்பாலான பெண்கள் அவர்களை சரிசமமாக நடத்தாதவர்களாக இருக்கின்றனர். அது மட்டுமன்றி, கொரிய ஆண்கள் தனக்கு தெரிந்த பெண்ணாக இருந்தாலும் தெரியாத பெண்ணாக இருந்தாலும் அவளுக்கு எந்த விதத்திலும் மரியாதையை குறைத்தோ-அதிகமாகவோ கொடுப்பதில்லை. இது, பெண்களை ஈர்க்கும் குணாதிசயங்களில் ஒன்றாகும். இதனால் மங்கையர் அதிகமாக வசீகரிக்கப்படுகின்றனர். 


உணர்ச்சிகளை வெளிப்படுத்துதல்:


கொரிய் ஆண்கள், இந்திய ஆண்களை போல அல்லாமல் தனக்கு ஏற்படும் உணர்ச்சிகளை வெளிப்படுத்த தயங்காமல் இருக்கின்றனர். இதனால் பாசம் காட்டுவது, அன்பும் காதலும் பொழிவது போன்ற குணாதிசயங்கள் அவர்களுக்கு இயற்கையாகவே இருப்பதாக கூறப்படுகிறது. இது, பெண்களை பெரும்பாலும் வசீகரிக்கிறது. 


பலதரப்பட்ட பார்வைகள்:


கொரிய ஆண்கள், ஒரு பிரச்சனையை எடுத்துக்கொண்டால் அதை பல கோணத்திலிருந்தும் பார்க்கிறார்களாம். தான் செய்யும் விஷயங்கள் தன்னை பாதிக்குமா என யோசிக்கும் முன்னர், தன்னை சுற்றி இருப்பவர்களையும் பாதிக்குமா, இதனால் அவர்கள் மனது புண்படுமா என்று நினைக்கின்றனர். இது, பெண்களுக்கு பிடித்த குணாதிசயத்துடன் ஒத்துப்போவதால் அவர்களுக்கு கொரிய ஆண்களை பிடிக்கிறது. 


மேலும் படிக்க | இரவில் தூங்கும் முன் தண்ணீர் குடிக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?


பகிரப்பட்ட ஆர்வங்கள்:


கொரிய டிராமா அல்லது கே-பாப் ரசிகர்கள் அனைவரும் ஒரே மாதிரியான ஆர்வங்கள் கொண்டவர்களாக இருக்கின்றனர். இதனால், கொரிய ஆண்களை இந்திய பெண்களுக்கு அதிகமாக பிடிக்குமாம். 


சமூக ஊடகங்களின் தாக்கம்:


சமூக ஊடகம், நமது வாழ்வை மாற்றுவதில் பெரும்பங்கு வகிக்கிறது. இதில் வரும் விஷயங்களை உண்மையா இல்லையா என தெரியாமல் பெரும்பாலானோர் நம்பி விடுகின்றனர். இது போன்ற ஊடகங்களில் கொரிய நாட்டை சேர்ந்தவர்கள் ஆக்டிவாக இருக்கின்றனர். இன்ஸ்டாகிராம், டிக் டாக் ஆகிய தளங்களில் கொரிய ஆண்கள் வீடியோக்களை பதிவிடுவதோடு, கொரிய தொடர்கள் மற்றும் படங்களின் எடிட்டையும் போஸ்ட் போடுகின்றனர். இதனாலும் பெண்கள் கொரிய ஆண்களால் ஈர்க்கப்படுகின்றனர். 


மேலும் படிக்க | அண்ணன்-தங்கை எப்போதும் சண்டை போடுவது ஏன்? காரணம் இதுதான்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ