டோக்கியோவில் ஒரு அழகான விளக்கு போல ஒளிரும் வெளிப்படையான பொது கழிப்பறைகள் நிறுவப்பட்டுள்ளன..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜப்பானிய தலைநகரின் வணிகப் பகுதியான ஷிபூயாவில் இரண்டு ஸ்மார்ட் கிளாஸ் அடிப்படையிலான பொதுக் கழிப்பறைகள் திறக்கப்பட்டுள்ளன. ஷிபூயா பகுதி ஷாப்பிங் வசதிகள் மற்றும் இரவு வாழ்க்கையின் தரத்திற்கு புகழ் பெற்றது. கழிப்பறைகள் வண்ணமயமான ஸ்மார்ட் கிளாஸை பயன்படுத்துகின்றன. யாரேனும் ஒரு நபர் உள்ளே நுழைந்தால் அது ஒளிபுகாதவாறு மாறும். கண்ணாடி தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. 


எனவே கழிப்பறை சுத்தமாக இருக்கிறதா என்பதை மக்கள் அடையாளம் காண முடியும். மேலும் தற்போது யாராவது உள்ளே இருந்தாலும் எளிதாக தெரிந்து கொள்ளலாம். பயனர்கள் ஒரு முறை கழிப்பறைக்குள் உள்ளே செல்லாமல், கண்ணாடி ஒளிபுகாதவாறு இருக்கிறதா இல்லையா என்று சொல்ல முடியாது. பணம் செலவழித்து உள்ளே செல்லும் போது அவர்களுக்கு விசித்திரமான உணர்வை அளிக்கிறது.


ALSO READ | கள்ளக்தலிக்காக தனது மனைவியை போட்டுத்தள்ளிய கொடூர கணவர்..!


டோக்கியோ டாய்லெட் திட்டத்தின் ஒரு பகுதியாக ஓய்வறைகளை உருவாக்க பல முன்னணி வடிவமைப்பாளர்கள் உதவினர். விருது பெற்ற கட்டிடக் கலைஞர் ஷிகெரு பான் இந்த பணியின் முக்கிய அங்கமாக இருந்தார். மேலும், திட்டத்தின் இணையதளத்தில் ஒரு அறிக்கையில் “ஒரு பொது கழிவறைக்குள் நுழையும் போது நாங்கள் கவலைப்பட வேண்டிய இரண்டு விஷயங்கள் உள்ளன. முதலாவது தூய்மை, இரண்டாவதாக யாராவது உள்ளே இருக்கிறார்களா என்பதுதான். சமீபத்திய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, வெளிப்புற கண்ணாடி பூட்டப்படும்போது ஒளிபுகாதவாறு மாறும்.


இது பயனர்கள் தூய்மையையும், வெளியில் இருந்து யாராவது கழிப்பறையைப் பயன்படுத்துகிறார்களா என்பதையும் சரிபார்க்க அனுமதிக்கிறது. இரவில், இந்த ஸ்மார்ட் கிளாஸ் கழிவறை ஒரு அழகான விளக்கு போல பூங்காவை ஒளிரூட்டுகிறது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இலாப நோக்கற்ற தொண்டு நிறுவனமான நிப்பான் அறக்கட்டளை, இந்த திட்டத்தை மேற்பார்வையிட்டுள்ளது. மேலும் அது ஒரு அறிக்கையில், “ஜப்பானில் பொது கழிப்பறைகளின் பயன்பாடு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஏனெனில் அவை இருண்ட, அழுக்கு மற்றும் பயமுறுத்தும் வகையில் ஒரே மாதிரியாக அமைந்துள்ளது.