Women Lifestyle, Relationship Tips : ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு பொதுவாக திருமணத்தைப் பற்றிய பயம் அதிகளவில் இருக்கிறது. அவர்கள் திருமணத்துக்கு பிந்தைய வாழ்க்கை குறித்து பயப்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அந்த காரணங்களை பட்டியலிடும்போது திருமணத்துக்கு முந்தைய மற்றும் பிந்தைய வாழ்க்கையில் இருக்கும் பெண்களிடம் ஒரே மாதிரியாக உள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆரோக்கியமான உறவு


திருமண வயதில் இருக்கும் பெண்களுக்கு வருங்கால கணவன் எப்படி இருப்பார் என்பது பெரிய கவலையாக இருக்கும். அவர் காதல் கணவனாக இருந்தால் கூட இப்போது இருப்பதுபோலவே இருப்பாரா? என்ற கவலை நிச்சயமாக இருக்கும். நல்ல உதாரணங்கள் பல இருந்தாலும், ஏதேனும் மோசமான முன்னுதாரணம் ஒன்று இருந்தால் கூட அந்த பெண்ணுக்கு ஏற்பட்டதுபோல் நமக்கும் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் திருமண வயதில் இருக்கும் பெண்களுக்கு இருக்கும். திருமணத்தை முடித்த பெண்களுக்கு தாங்கள் எதிர்பார்த்தைப்போல் கணவன் அமையாவிட்டால் அவர்களுக்கு அது மிகப்பெரிய ஏமாற்றமாக நினைப்பார்கள். தங்களின் திருமண வாழ்க்கை இப்படி இருக்கும் என கனவில் கூட நினைக்கவில்லை என வேதனையுடன் புலம்பிக் கொண்டிருப்பார்கள். 


மேலும் படிக்க | உங்கள் உணர்ச்சிகளை எப்படி கட்டுப்படுத்துவது? உளவியலாளர் சொல்லும் எளிய குறிப்புக்கள்!


அவசர திருமணம்


திருமணமாகாத பெண்கள், திருமண பேச்சை எடுத்தவுடன் அவர்கள் முதலில் நினைப்பது அவசரமாக திருமணம் செய்து கொள்கிறோமோ, அதற்கான வயது நமக்கு இன்னும் வரவில்லையே என நினைப்பார்கள். திருமணமான பெண்களும் ரொம்ப சீக்கிரமாக திருமணம் செய்து கொண்டோமோ, இன்னும் கொஞ்ச நாட்களுக்கு திருமணம் செய்யாமல் இருந்திருக்கலாமோ என்ற எண்ணம் வரும். இது எதனால் வருகிறது என்றால் எதிர்காலம் அவர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்ற கவலையால் வரும். இந்த பயத்துக்கான விடை காலம் மட்டுமே. 


திருமண எதிர்பார்ப்புகள்


திருமணம் குறித்த பயம் இயல்பாக இருந்தாலும், அதற்கு என சில எதிர்பார்ப்புகள் பெண்களிடையே இருக்கும். ஏனென்றால் அவர்களின் வாழ்க்கை முற்றிலும் புதிய சூழலுக்கு செல்ல இருப்பதால், அந்த சூழல் எப்படி இருக்கும் என தெரியாது. அதனால் அதனை சமாளிக்க முடியுமா, யாரிடம் எப்படி பழகுவது என்ற கவலையும் சேர்ந்து கொள்ளும். கூடவே தனக்கென இருந்த சில அடிப்படை ஆசைகள் நிறைவேறுமா என்ற கவலையும் பெண்களிடத்தில் இருக்கும். தன்னுடைய ஆசைகளுக்கு கணவன் ஒத்துழைக்காவிட்டால் என்ன செய்வது எனவும் ஆழ்ந்த யோசனை பெண்களிடத்தில் இருக்கும். 


இருவருக்குமான எல்லைகள்


திருமணமான பெண்கள் கணவனின் எல்லைகளை எதிர்கொள்வதில் கடும் நெருடலை எதிர்கொள்வார்கள். சின்ன சின்ன விஷயங்களில் கணவனின் கோபத்துக்கு ஆளாக நேரிடும். அப்போது திருமணத்துக்கு முன்பு அவர்கள் கற்பனை செய்து வைத்திருந்த கதாபாத்திரம் இல்லை என உணரத் தொடங்குவார்கள். இது அவர்களுக்குள் பெரும் ஏமாற்றதையும் கடும் கோபத்தையும் வரவழைக்கும். தான் எதிர்பார்த்த ஒருவர் இல்லை எனும்போது அவர்களின் ஏமாற்றத்தின் வெளிப்பாடு கரடுமுடாகவே இருக்கும். இந்த உறவுச் சிக்கல்களை கணவன் மனைவி இருவருமே எதிர்கொள்ள நேரிடும். 


எதார்த்தத்தை புரிந்து கொள்ளுதல்


பொதுவாக பெண்கள் திருமண உறவில் நுழைந்த பிறகு திருமணத்துக்கு முன்பு உருவகப்படுத்தி வைத்திருந்த தங்களின் கற்பனை கதாபாத்திரத்தில் இருந்து எதார்த்ததை புரிந்து கொள்ளுவதற்கு கொஞ்சம் நாட்கள் ஆகும். இதுதான் வாழ்க்கை இவரோடு தான் சேர்ந்து பயணிக்கப்போகிறோமா? என்று உணரும் வரை இந்த சிக்கல்கள் திருமணமான புதிதில் பெண்களுக்குள் இருந்து கொண்டே இருக்கும். திருமணத்துக்கு முன்பு பெரும்பாலும் இந்த எதார்த்த அனுபவம் அவர்களுக்கு கிடைக்காது. அதனால் தான் திருமணமான பெண்கள் கொஞ்ச நாட்களிலேயே கணவன் மீது அதிருப்தி கொள்ள இத்தனை காரணங்கள் இருக்கின்றன. 


மேலும் படிக்க | கனவுகளை நனவாக்க வேண்டுமா? யோசிக்காம ‘இந்த’ 5 விஷயங்களை பின்பற்றுங்கள்..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ