நல்லவராக இருந்தும் சிங்கிளாக இருக்கிறீர்களா? அதற்கான முக்கிய காரணம் இதுதான்
நல்லவராக இருந்தும் நீண்ட நாட்களாக லைப் பார்ட்னர் அமையவில்லை என புலம்புபவர்களில் நீங்களும் ஒருவர் என்றால், அதற்கான காரணத்தை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் நேர்மையானவர், அன்பானவர், ஏன் அழகானவர் என எல்லா நல்ல குணாதிசயங்களை பெற்றிருந்தும் நீங்கள் சிங்கிளாகவே இருக்கிறீர்களா?. நீங்கள் மட்டுமல்ல, உங்களுக்கு கம்பெனி கொடுக்க பல பேர் இருக்கின்றனர். இப்படியானவர்களுக்கு வாழ்க்கை துணை அமைவதில் தாமதம் ஏற்படுகிறது. அதற்கான காரணம் என்ன? என்பதை தெரிந்து கொள்வோம்.
சரியான நபருக்காக காத்திருக்கிறீர்கள்:
புலி பசித்தாலும் புல்லை தின்னாது என்பது போல, சரியான துணைக்காக எத்தனை காலம் வேண்டுமானாலும் காத்திருக்க நீங்கள் தயாராக இருப்பீர்கள். சரியான நபரை தேர்ந்தெடுக்க தெரியாதவராகவும் நீங்கள் இருக்கக்கூடும். எனவே, எடுத்தோம் கவிழ்த்தோம் என்று அவசரமாக முடிவு எடுக்காமல், உங்களுக்கேற்ற சரியான நபர் கண்ணில் படும் வரை காத்திருக்கவே விரும்புவீர்கள்.
மேலும் படிக்க | அமைதி பேச்சுவார்த்தைக்கு க்ரீன் சிக்னல் காட்டும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி!
’செட்டில்’ ஆகும் எண்ணம் இல்லை:
காதலிக்க விரும்பினாலும் கழுத்தில் மாலையிட தயங்குவீர்கள். சிங்கிளாகவே இத்தனை காலம் வாழ்ந்துவிட்டதால் இந்த தயக்கம் ஏற்படக்கூடும். காதலித்தோமா, கல்யாணம் செய்தோமா என்று வாழ்க்கையை நகர்த்தி கொண்டே செல்லாமல், நின்று நிதாரணமாக அனுபவித்து வாழ விரும்புகிறீர்கள்.
அதற்கெல்லாம் நேரமில்லை:
எந்நேரமும் வேலை என சுழன்று கொண்டிருப்பவர்களுக்கு காதலை தேடிச் செல்ல நேரம் இருக்காது. வாழ்க்கையை இப்படித்தான் வாழவேண்டும் என்று உறுதியான எண்ணம் கொண்ட நீங்கள், காதலுக்காக உங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள தயாராக இல்லை.
உங்களை பார்த்தாலே பயம்! உங்களை பார்த்தாலே பலர் பயப்படுவது போல நீங்கள் உணரலாம்.
குறிப்பாக, தைரியமான பெண்களைக் கண்டால் சில ஆண்களுக்கு பயம் ஏற்படும். நீங்கள் கெத்தாக இருப்பதால் உங்களைக் காணும் ஆண்கள் தாழ்வு மனப்பான்மை காரணமாக விலகி நிற்பர். அதே போல, பெண்களை அணுக தயங்கும் ஆண்களும் சிங்கிளாக இருப்பதில் ஆச்சரியமில்லை.
இந்த காலத்தில் உண்மையான காதலா?
காதல், கல்யாணம் இவற்றில் நம்பிக்கை இல்லாதவராக நீங்கள் இருக்கலாம். முன்பு இருந்த உறவுமுறைகள் இன்றைய நவீன யுகத்தில் மாற்றம் கண்டிருப்பதை நீங்கள் உணர்ந்திருக்கலாம். எனவே, இன்று இருக்கும் காதலில் துன்பங்களும், அலைச்சல்களுமே அதிகம் என்று உறுதியாக நம்புகிறவர் நீங்கள்.
மேலும் படிக்க | டிவிட்டரை அடுத்து அதிரடியில் இறங்கிய மெட்டா... ஆயிரக்கணக்கானோர் பணி நீக்கம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ