தன் கணவருக்கு தற்போது 47 குழந்தைகள் உள்ளனர் என்பதை தெரிந்து கொண்ட மனைவி வலைதளத்தில் மக்களிடம் தீர்வை கேட்டுள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த பரந்த உலகை சுற்றி எத்தையோ விசித்திறான நிகழ்வுகள் நடக்கின்றனர். அவைகளில் சில சம்வம் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தும், சிலை நகைச்சுவையிலும் ஆழ்த்தும். அந்தவகையில், தன் கணவருக்கு தற்போது 47 குழந்தைகள் உள்ளனர் என்பதை தெரிந்து கொண்ட மனைவி தற்போது அவரை விவாகரத்து செய்யலாமா வேண்டாமா என சமூகவளைதம் மூலம் மக்களிடம் தீர்வு கேட்டுள்ளார். 


ரெட்டிட் என்ற சமூகவலைதளத்தில் மக்கள் தங்களுக்கு ஏற்படும் குழப்பங்கள் மற்றும் கேள்விகளை பதிவிடுவர் அதற்கு மற்றவர்கள் பதிலளிப்பார்கள். அந்த வகையில் பெயரை வெளியிட விரும்பாத பெண் ஒருவர் அந்த கணக்கில் "நான் எனது கணவரை 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டேன் எங்களுக்கு ஒரு மகன் இருக்கிறான். நாங்கள் திருமணத்திற்கு முன்பு டேட்டிங்கில் இருக்கும் போதே அவர் விந்து தானம் அளித்துள்ளது குறித்து என்னிடம் தெரிவித்திருந்தார். 



அப்பொழுது நான் அதை பெரிய பொருட்டாக எடுக்கவில்லை. அந்த விந்து தானம் மூலம் இதுவரை 1-2 குழந்தைகள் பிறந்திருக்ககூடும் என நினைத்திருந்தேன். நானும் அவரிடம் அது குறித்து எதுவும் கேட்கவில்லை. இந்த சம்பவம் பற்றி பேசுவதற்கு எனக்கு விருப்பமும் இல்லை. இந்நிலையில், சமீபத்தில் மனதில் அவருக்கு விந்து தானம் மூலம் எத்தனை குழந்தைகள் இருக்கிறார்கள் என தெரிந்து கொள்ள வேண்டும் என ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. அதனால் அவரிம் நான் அந்த விஷயத்தை கேட்டேன் அதற்கு அவர் தனக்கு கடைசியாக கருத்தரிப்பு மையத்தில் இருந்த வந்த தகவலின் படி சுமார் 47 குழந்தைகள் பிறந்துள்ளதாக கூறினார். இதை கேட்டதும் எனக்கு தலையே சுற்றிவிட்டது 1-2 என்றால் பராவாயில்லை 47 குழந்தைகளா? என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. 


சட்டப்படி அந்த குழந்தைகள் வளர்ந்து 18 வயதை கடந்துவிட்டால் அவர்களுக்கு தங்களது பயாலஜிக்கல் அப்பா யார் என தெரிய வேண்டும் என கேட்டால் அது அவர்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும் என்பது சட்டம். ஒருவேளை எதிர்காலத்தில் எல்லோரும் இவரை தேடி வந்தால் என்ன செய்வது? நான் இவரை தற்போது விவகாரத்து செய்யலாமா என யோசிக்கிறேன் " என பதிவிட்டுள்ளார்.  இவரின் இந்த குழப்பத்திற்கு பலரும் தங்களின் கருத்துக்களை கூறி வருகின்றனர்.