காதலி தன்னை விட்டு பிரிவதாக கூறியதால் ஆத்திரமடைந்த காதலன், காதலியின் உதட்டை கடித்து துப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்காவை சேர்ந்த மாணவன் ப்லூரி (Fleury) வயது 23. இவர், கைலா ஹேய்ஸ் (Kayla Hayes) என்ற 19 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவருக்கும் அடிக்கடி கருத்துவேறுபாடு ஏற்பட்ட காரணத்தால் ஃப்லூரியை விட்டு பிரிவதாக ஹேயஸ் கூறியுள்ளார். ஆனால், தன் காதலியை முத்தமிட ப்லூரி முயற்சி செய்துள்ளார். அதனை ஹேயஸ் தடுத்தபொழுது, தன் காதலியின் உதட்டை கடித்து துப்பி உள்ளார்.


இதனை அடுத்து, பாதிக்கப்பட்ட பெண் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வாய்ப்பகுதியில் 300-க்கும் மேற்பட்ட தையல்கள் போட்ட மருத்துவர்கள், கடும் சிரமத்திற்கு பிறகு உதட்டை ஒட்டவைத்துள்ளனர்.



இது குறித்து, கைலா ஹேய்ஸ் காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து, இது குறித்து காவல்துறையினர் வழக்குபதிவி செய்து கைது செய்துள்ளனர். பின்னர், இவரை அவரை காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளனர்.