இன்று உலக புற்றுநோய் தினம்: விழிப்புணர்வு பெறுவோம்
இன்று பிப்ரவரி 4, உலக புற்றுநோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது. புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.
இன்று பிப்ரவரி 4, உலக புற்றுநோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது. புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு வருடமும் இந்த நாள் மருத்துவ உலகில் மிக முக்கியமான தினமாக பார்க்கப்படுகின்றது.
தற்போது உலகளவில் புற்றுநோய் மிகவும் பரவலாகக் காணப்படுகிறது. இது அதிகமாகப் பேசப்படும் ஒரு பயங்கரமான நோயாகவும், மரண பயத்தோடு இணைந்த நோயாகவும் கருதப்படுகிறது. இந்தியாவில் ஆண்டுக்கு 12 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். ஏழு லட்சம் பேர் புற்றுநோயால் உயிரிழக்கின்றனர். மக்களுக்கு புற்று நோய் குறித்த விழிப்பு உணர்வு இல்லாததே, இதற்கு காரணம் என்கின்றனர் மருத்துவர்கள்.
புற்றுநோயை குறித்து ஒவ்வொரு வரும் விழிப்புணர்வு பெற்று, மற்றவர்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என அனைவரும் உறுதியேற்போம். புற்றுநோயை குறித்து அரசு பல முகாம் மற்றும் பிரச்சாரம் நடத்தி வருகிறது.
புற்றுநோயை தடுக்கும் வீட்டிலே எளிய முறைகள்:-
புற்றுநோயை தடுக்கும் மருத்துவ குணங்கள் கொண்டது கறிவேப்பிலை. இது புற்றுநோய் மற்றும் இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது.
மார்பக புற்றுநோயிலிருந்து விடுபட ப்ராக்கோலி சாப்பிட்டால். இது பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் மற்றும் மற்ற வகை புற்றுநோய்களையும் வராமல் தடுக்கும்.
பப்பாளியில் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்திருப்பதால் அதனை உட்கொண்டால் புற்றுநோய் வரும் அபாயத்தை தவிர்க்கலாம்.
புற்றுநோய் வகைகள்:-
மார்பகப் புற்றுநோய்
நுரையீரல் புற்றுநோய்
ஆண்மைச் சுரப்பிப் புற்றுநோய்
தலை மற்றும் கழுத்துப் புற்றுநோய்
கர்ப்பப்பை புற்றுநோய்
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்
கணைய புற்றுநோய்
லிம்போமா
விரைப் புற்றுநோய்
லூக்கீமியா
வயிற்றுப் புற்றுநோய்
மல்டிப்பிள் மைலோமா
மூளைப் புற்றுநோய்
கடைப்பெருங்குடல் புற்றுநோய்.