ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 15 ஆம் தேதி உலக நுகர்வோர் உரிமைகள் நாள் (World consumer rights day) ஆக கொண்டாடப்படுகிறது. இந்திய அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 15 ஆம் தேதியை தேசிய நுகர்வோர் உரிமைகள் நாளாகப் (National consumer rights day) பிரகடனப்படுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜோன். எப். கென்னடி, அமெரிக்க பாராளுமன்றத்தில் 1962 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் தேதி நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பாகவும், நுகர்வோர் உரிமைகள் சட்டம் தொடர்பாகவும் ஆற்றிய முக்கியமான ஒன்றாகும். அவ்வுரையே உலக அளவில் ஒரு நாட்டுத் தலைவர் நுகர்வோர் பாதுகாப்புத் தொடர்பாக ஆற்றிய முக்கிய உரையாகக் கணிக்கப்படுகின்றது.


அதே வேளை நுகர்வோர் பாதுகாப்புத் தொடர்பாகக் கரிசனை காட்டிய முதலாவது நாட்டுத் தலைவராகவும் ஜோன். எப். கென்னடி கணிக்கப்படுகின்றார். அதனை நினைவு கூறும் விதமாக 1962 ஆம் ஆண்டு, ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 15 ஆம் திகதியை உலக நுகர்வோர் உரிமைகள் நாள் ஆக பிரகடனப்படுத்தி அறிவிக்கப்பட்டது. அதற்கு அடுத்த ஆண்டு அதாவது 1963 ஆம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி உலக நுகர்வோர் உரிமைகள் நாள் ஆக அனுசரிக்கபப்டுகிறது.


நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் மூலம் பாதிக்கப்படும் பயனாளிகள் விரைவாக தீர்வு காண நுகர்வோர் நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. இதனை மக்கள் தெரிந்துகொள்ளவும், பயன்படுத்திக் கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நாடு முழுவதும் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன.