World Radio Day 2021: சமூக தொடர்பை வலுப்படுத்தும் சிறந்த ஊடகம் வானொலி- பிரதமர் மோடி
உலக வானொலி தினத்தன்று நாட்டு மக்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி. சமூக தொடர்பை வலுப்படுத்தும் ஒரு அருமையான ஊடகம் என்று வானொலியை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை பாராட்டினார்.
உலக வானொலி தினத்தன்று நாட்டு மக்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி. சமூக தொடர்பை வலுப்படுத்தும் ஒரு அருமையான ஊடகம் என்று வானொலியை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை பாராட்டினார்.
ஒரு ட்வீட்டில், பிரதமர் நரேந்திர மோடி, (PM Narendra Modi) தனது மாதாந்திர ஒளிபரப்பான 'மான் கி பாத்' மூலம் வானொலியின் நேர்மறையான தாக்கத்தை உணர்ந்து கொண்டதாக கூறினார். ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமைகளில், பிரதமர் மோடி, மன் கீ பாத் என்னும் மனதின் குரல் நிகழ்ச்சியில் நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.
"உலக வானொலி தின வாழ்த்துக்கள்! புதுமையான உள்ளடக்கம் மற்றும் இசையுடன் ஒலித்துக்கொண்டிருக்கும் வானொலியின் நேயர்களுக்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இது ஒரு அருமையான ஊடகம், இது சமூக தொடர்பை வலுப்படுத்துகிறது. மன் கீ பாத் (Mann Ki baat) கழ்ச்சியின் மூலம் வானொலியின் நேர்மறையான தாக்கத்தை நான் தனிப்பட்ட முறையில் அனுபவித்திருக்கிறேன் ” என்றார் பிரதமர்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையால் 2012 ஆம் ஆண்டு வானொலி தினம், ஒரு சர்வதேச நாளாக அங்கீகாரத்தை பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 13 உலக வானொலி தினமாக அனுசரிக்கப்படுகிறது.
உலக வானொலி தினம் 2021
பிப்ரவரி 13 வானொலி ஊடகத்தின் பெருமையையும் சிறப்பையும் அங்கீகரிக்கும் வகையில், வானொலி தினமாக கொண்டாடப்படுகிறது, ஏனெனில் இந்த நாளில், 1946 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் வானொலி மீண்டும் நிறுவப்பட்டது. இந்த நாளை உலக வானொலி தினமாக கொண்டாடப்பட பட வேண்டும் என்ற யுனெஸ்கோவின் திட்டத்தை, 2013 ஜனவரி 14 ஆம் தேதி அன்று ஐ.நா பொதுச் சபை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கிறது.
ALSO READ | தற்சார்பு பாரதம்: கூகுள் மேப், கூகுள் எர்த் சேவைக்கு போட்டியாக ISRO-MapmyIndia
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR