இன்று பிப்ரவரி 4, உலக புற்றுநோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது. புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு வருடமும் இந்த நாள் மருத்துவ உலகில் மிக முக்கியமான தினமாக பார்க்கப்படுகின்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் ஆண்டுக்கு 12 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். ஏழு லட்சம் பேர் புற்றுநோயால் உயிரிழக்கின்றனர். மக்களுக்கு புற்று நோய் குறித்த விழிப்பு உணர்வு இல்லாததே, இதற்கு காரணம் என்கின்றனர் மருத்துவர்கள். 


அந்த வகையில் புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு மற்றவர்களுக்கு தன்னம்பிக்கையை அளித்த இந்திய பிரபலங்கள் ஒரு பார்வை!!


கவுதமி:-


தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற நடிகை கவுதமி. இவருக்கு மார்பக புற்றுநோய் தாக்கியது. புற்றுநோயால் சோர்ந்து விடாத இவர் இடைவிடாத போராட்டத்தால் அதிலிருந்து மீண்டு வந்தார். 


யுவராஜ் சிங்:-


இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்  புற்றுநோயால் கடந்த 2011 ம் ஆண்டு பாதிக்கப்பட்டார். அவரின் இடது நுரையீரலை இந்த நோய் தாக்கியது. தனது தளராத நம்பிக்கையால் 2012ம் ஆண்டு இந்த நோயிலிருந்து அவர் மீண்டு வந்தார். 


மனிஷா கொய்ராலா:-


மனிஷா கொய்ராலா கடந்த 2012 ம் ஆண்டு கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அமெரிக்கா சென்று சிகிச்சை எடுத்துக் கொண்ட பின்னர் 2013ம் ஆண்டு அவர் இந்த நோயிலிருந்து வெற்றிகரமாக மீண்டு வந்தார். 


மம்தா மோகன்தாஸ்:-


நடிகை மம்தா மோகன்தாசை கடந்த 2010 ம் வருடம் புற்றுநோய் தாக்கியது. அதிலிருந்து மீண்டு கடந்த 2011 ம் ஆண்டு நண்பரும், தொழிலதிபருமான பிரஜித் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் ஒரே வருடத்தில் அவரிடமிருந்து விவாகரத்து பெற்று விட்டார். இதன் பின்னர் மீண்டும் அவரை புற்றுநோய் தாக்கியது தற்போது மீண்டும் அதிலிருந்து குணமடைந்துள்ளார். 


இன்னொசென்ட்:-


மலையாள மூத்த நடிகர் இன்னொசென்ட் கடந்த 2013ல் தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். 4 மாதங்கள் சிகிச்சை எடுத்துக் கொண்டு கடந்த 2015ல் இந்த நோயிலிருந்து வெற்றிகரமாக மீண்டார்.


அனுராக் பாசு:-


பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் பாசு புற்றுநோயால் கடந்த 2004 ம் ஆண்டு கடுமையாக பாதிக்கப்பட்டார். பின்னர் 3 வருட கடுமையான சிகிச்சைக்குப் பின்னர் அதிலிருந்து வெற்றிகரமாக மீண்டு தற்போது மீண்டும் படங்களை இயக்கி வருகிறார்.