துபாயில் உலகிலேயே மிக அதிக விலையிலான ஷு தயாரிக்கப்பட்டுள்ளன. தங்கம், வைரக்கற்களால் தயாரான ஷுக்களின் மதிப்பு ரூ.123 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது...! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"தங்கத்துலையே செருப்பு செஞ்சாலும் அத கால்லதான் போடமுடியும்; தலைல தூக்கி வைக்க முடியாது" என்ற பழமொழி நாம் அனைவஅருண் கேள்விபட்டிருபோம். ஐக்கிய அரபு நாடான துபாயில் உலகிலேயே மிக அதிக விலையிலான ஒரு ஜோடி ஷு தயாரிக்கப்பட்டுள்ளன. இது தான் உலகின் மிக விலை உயர்ந்த, ஆடம்பர ஷூ எனக் கூறப்படுகிறது. துபாயில் உள்ள நகை விற்பனை நிறுவனமான Passion Jewellers மற்றும் ஜடா துபாய் என்ற இரு நிறுவனங்கள் இணைந்து மிக நேர்த்தியாக இந்த விலை உயர்ந்த காலணியை தயாரித்திருக்கின்றனர். இதனை முழுமையாக வடிவமைத்து தயாரிக்க 9 மாத காலம் ஆனதாக தயாரிப்பு நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். 


100-க்கும் அதிகமான 15 காரட் வைரக்கற்களையும், தங்க கட்டிகளையும் பயன்படுத்தி தயார் செய்யப்பட்ட இந்த காலணியின் மதிப்பு 17 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 123 கோடி). தற்பொழுது காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் இந்த காலணியின் அளவு ஐரோப்பிய அளவில் 36 எனவும் காலணியை வாங்குபவர்களுக்கு தக்கவாறு அளவு மாற்றப்படும் எனவும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



துபாயின் முக்கிய பிரபலங்கள், செய்தியாளர்கள் உள்ளிட்டவர்கள் இந்த காலணி வெளியீட்டு விழாவில் பங்கேற்றனர்.