WATCH: தனது ஒரே வீடியோவில் ரசிகர்களை கிறங்கடித்த யாஷிகா.....
இணையத்தை கலக்கும் பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்தின் பாட்டில் கேப் சவால் வீடியோ!!
இணையத்தை கலக்கும் பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்தின் பாட்டில் கேப் சவால் வீடியோ!!
ஜீவா - காஜல் அகர்வால் நடித்த கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். இதையடுத்து துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து, நோட்டா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற பிக் பாஸ் 2-வது சீசனில் பங்கேற்று பிரபலமடைந்தார் யாஷிகா ஆனந்த். அதே சீசனில் பங்கேற்ற ஐஸ்வர்யா தத்தாவுடன் சேர்ந்த் பார்ட்டிக்கு செல்வது, புகைப்படம் எடுப்பது, அதை சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில், இந்நிலையில் சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவரது நண்பர் ஒருவர் தண்ணீர் பாட்டிலை பிடித்திருக்க அதை தனது காலால் எட்டி உதைத்த படியே பாட்டிலை திறந்துவிட்டார். தற்போதைய இணையவாசிகல் அமைவரும் மற்றவருக்கு Challenge விடுவதையே பெரிய பொழுதுபோக்காக வைத்துள்ளனர். தங்களுக்கு பிடித்த அல்லது அபிமான விளையாட்டுகளை ஊடகங்களில் சவாலாக பதிவிட்டு அந்த வீடியோக்களை வைரலாக்கி வருகின்றனர்.
என்னக்கு தெரிந்தவரை இந்த சவால் பிட்னெஸ் சவாலில் ஆரம்பித்து Kiki சவால், ஐஸ் பக்கெட் சேலஞ்ச், Momo சவால், EatTheBean சவால், மேரி பாபின்ஸ் சவால், ஸ்னூட் சவால் என பல சவால்களை தொடர்ந்து தற்போது `பாட்டில் கேப் சேலஞ்ச்' என்ற புதியவகை சாலன்ஜ்-யை கண்டுபிடித்துள்ளனர். அந்த சவாலை நடிகை யாசிக்காவும் அற்புதமாக செய்து அசத்தியுள்ளார். இந்த வீடியோ தற்போது இன்ஸ்டாகிராமில் பெரும் வைரலாக பரவி வருகிறது.