Royal Enfield Bikes Prices in India: இந்தியாவை பொறுத்தவரை இளைஞர்கள் மத்தியில் ராயல் என்ஃபீல்டின் பைக்குகள் மிகவும் அதிக அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் காரணமாக, இன்றைய நாளில் ஒவ்வொரு இளைஞர்களும் தன் வாழ்நாளில் ஒரு முறையாவது புல்லட் சவாரி செய்யவேண்டும் என விரும்புகிறார்கள். புல்லட்டின் மீதான ஆர்வத்தை கருத்தில் கொண்டு, மற்ற இரு சக்கர வாகன உற்பத்தியாளர்கள் கனரக பைக்குகள் போன்றே புதிய மாடல்களை அறிமுகப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நீங்கள் புல்லட்டை ஓட்ட விரும்புகிறீர்கள், ஆனால் குறைந்த பட்ஜெட் காரணமாக வாங்க முடியவில்லை என்றால், உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ப ராயல் என்ஃபீல்ட் புல்லட் பைக்குகள் வாங்கக்கூடிய இடத்தை நாங்கள் உங்களுக்கு சொல்லப்போகிறோம்.


ALSO READ |  Bajaj Chetak: நம்ப முடியாத விலை, அதிரடி அம்சங்களுடன் அசத்தும் Cheapest Electric scooter


பைக்குகள் பற்றிய தகவல்களையும், செகண்ட் ஹேண்ட் பைக்குகளை விற்பனை செய்வது குறித்தும் அனைத்து தகவல்களையும் வழங்கும் வலைத்தளமான ட்ரூம், ராயல் என்ஃபீல்டின் பல சிறந்த பைக்குகளை தனது தளத்தில் பட்டியலிட்டுள்ளது. இந்த புல்லட் பைக்குகளின் (Royal Enfield Bullet) விலையை புதிய விலையுடன் ஒப்பீடும் போது பாதிக்கும் குறைவான விலையில் வாங்கலாம்.


குறைந்த விலையில் எந்த ராயல் என்ஃபீல்ட் பைக்கை நீங்கள் ட்ரூம் வலைத்தளத்தில் வாங்கலாம்:


இணையதளத்தில் இதுபோன்ற பல ராயல் என்ஃபீல்ட் பைக்குகள் உள்ளன. அதில் 2010 முதல் 2012 மாடல்கள் வரை உள்ளன. இந்த பைக்குகளின் விலை 50 ஆயிரம் ரூபாய் வரை என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 


ட்ரூம் வலைத்தளத்தில் ராயல் என்ஃபீல்டின் குரூஸ் பைக் தண்டர்பேர்ட் 350 பட்டியலிடப்பட்டுள்ளது. இது 2012 மாடலாகும். நிறுவனம் அதன் விலையை 45 ஆயிரம் ரூபாயாக நிர்ணயித்துள்ளது.


ALSO READ |  Best Bikes: அசத்தலான விலையில், அதிரடியான செயல்திறன் கொண்ட பைக்குகளின் பட்டியல் இதோ


நீங்கள் மவுண்டன் பைக்கில் உற்சாகமான பயணத்தை செய்ய விரும்பினால், இங்கே பட்டியலிடப்பட்டுள்ள இந்த வலைத் தளத்திலிருந்து ராயல் என்ஃபீல்டின் இமலாயன (Royal Enfield Himalayan) பைக்கை எடுத்துக் கொள்ளலாம்.


இந்த நிறுவனம் பட்டியலிட்டுள்ள ராயல் என்ஃபீல்ட் இமலாயன பைக்கின் மாடல் 2016 ஆகும். இந்த பைக்கில் 410 சிசி எஞ்சின் உள்ளது மற்றும் இது 14 ஆயிரம் கிலோமீட்டர் வரை இயங்கியுள்ளது. இந்த பைக்கின் விலையை ரூ .1 லட்சமாக நிறுவனம் நிர்ணயித்துள்ளது.


இது தவிர, இன்னும் பல ராயல் என்ஃபீல்ட் பைக்குகள் (Royal Enfield Bike) இந்த இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன, அவை 50 ஆயிரம் முதல் 1 லட்சம் என விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 


ALSO READ |  ரூ .10 லட்சத்திற்குள் வாங்கக்கூடிய தானியங்கி கார்களின் விவரம்!


முக்கிய அறிவிப்பு: எந்தவொரு செகண்ட் ஹேண்ட் பைக்கையும் வாங்குவதற்கு முன், அவற்றின் நிலையை, அதன் காகிதத்தை நன்கு சரிபார்க்கவும், இதனால் எதிர்காலத்தில் நீங்கள் எந்த பிரச்சனையும் சந்திக்க வேண்டியதில்லை.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR