LPG Booking Offer: Paytm மூலம் புக் செய்யும் போது ₹2700 வரை கேஷ்பேக் பெற வாய்ப்பு
பேடிஎம் மூலம் செய்யபடும் எல்பிஜி சிலிண்டர் முன்பதிவில் கேஷ்பேக் உள்ளிட்ட பல சலுகைகள் கிடைக்கும்.
LPG Booking Offer: அதிகரித்து வரும் எல்பிஜி சமையல் எரியாவ்யு சிலிண்டரின் விலை பலரை கவலையில் ஆழ்த்தியுள்ளது. அதன் மத்தியில் உங்களுக்கு நிம்மதி அளிக்கும் விதமாக, இப்போது நீங்கள் எல்பிஜி சிலிண்டரை மலிவாகப் பெறலாம். இதன் கீழ், நீங்கள் இன்னும் பல சலுகைகள் மற்றும் நன்மைகளைப் பெறுவீர்கள். இதற்காக, நீங்கள் Paytm மூலம் சமையல் எரிவாயு சிலிண்டரை முன்பதிவு செய்ய வேண்டும்.
பேடிஎம் மூலம் எல்பிஜி முன்பதிவில் பம்பர் கேஷ்பேக்
இந்த சிறப்பு சலுகையின் கீழ், நீங்கள் பேடிஎம் மூலம் எல்பிஜி சிலிண்டரை முன்பதிவு செய்தால், உங்களுக்கு ரூ.2,700 என்ற அளவிற்கு நேரடி பலன் கிடைக்கும். LPG சிலிண்டர் முன்பதிவில் கேஷ்பேக் மற்றும் பல வெகுமதிகளை பேடிஎம் அறிவித்துள்ளது. Paytm வழங்கும் '3 Pay 2700 Cashback Offer' என்ற திட்டம் மூலம் புதிய பயனர்கள் இந்த சலுகையைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதில் அவர்கள் தொடர்ச்சியாக மூன்று மாதங்களுக்கு செய்யும் முதல் முன்பதிவில் ரூ.900 வரை நிச்சயம் கேஷ்பேக் பெறுவார்கள்.
ALSO READ | Indian Railways: இப்போது ‘வேறு ஒருவரும்’ உங்கள் டிக்கெட்டில் பயணம் செய்யலாம்..!!
ரூ.900 வரை கேஷ்பேக்
இந்த சலுகையில் விதிமுறைகளும் நிபந்தனைகளும் உள்ளன. இந்த கேஷ்பேக் முதல் முறையாக LPG சிலிண்டர்களை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும். ஒவ்வொரு மாதமும் மூன்று எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்தால், முதல் முன்பதிவில் ரூ .900 வரை கேஷ்பேக் கிடைக்கும். இந்த கேஷ்பேக் மூன்று மாதங்களுக்கு கிடைக்கும். இந்த கேஷ்பேக் ரூ .10 முதல் ரூ .900 வரை இருக்கலாம்.
இன்னும் பல சலுகைகள் இருக்கும்
இது தவிர, Paytm தற்போதுள்ள பயனர்களுக்கு ஒவ்வொரு முன்பதிவுக்கும் வெகுமதிகளை வழங்குகிறது. சிறந்த பிராண்டுகளின் பொருட்களை வாங்க 5000 கேஷ்பேக் புள்ளிகள் வரை வழங்கப்படும். Paytm சில காலங்களுக்கு முன்பு தனது செயலியில் ஒரு புதிய அம்சத்தையும் சேர்த்துள்ளது. இதில் பயனர்கள் முன்பதிவு செய்த பிறகு சிலிண்டரின் விநியோக நிலையையும் கண்காணிக்க முடியும். இது தவிர, சிலிண்டரை நிரப்புவதற்கான நினைவூட்டலும் தொலைபேசியில் வரும்.
'Paytm போஸ்ட்பெய்ட்' திட்டம்
இந்த ''3 Pay 2700 Cashback Offer' அனைத்து 3 முக்கிய எல்பிஜி நிறுவனங்களான - இண்டேன், HP Gas மற்றும் பாரத் காஸ் ஆகியவற்றின் சிலிண்டர்களை முன்பதிவு செய்வதற்கு பொருந்தும். பேடிஎம் போஸ்ட்பெய்ட் என பிரபலமாக அறியப்படும் ''Paytm Now Pay Later' திட்டத்தில் பதிவு செய்வதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு அடுத்த மாதம் சிலிண்டர் முன்பதிவுக்கான கட்டணத்தைச் செலுத்த வாய்ப்பு உள்ளது.
ALSO READ | Indian Railways: டிக்கெட் புக் செய்கையில் நினைவில் கொள்ள வேண்டிய புதிய குறியீடுகள்
கேஷ்பேக் பெறுவது எப்படி?
1. முதலில் Paytm செயலியைப் பதிவிறக்கவும்
2. இதற்குப் பிறகு சிலிண்டர் முன்பதிவுக்குச் செல்லவும். பின்னர் உங்கள் எரிவாயு நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கவும். இதில், நீங்கள் பாரத் கேஸ், இந்தேன் கேஸ் மற்றும் HP கேஸ் ஆகிய மூன்று அப்ஷகளைக் காண்பீர்கள்.
3. இதற்குப் பிறகு உங்கள் பதிவு எண் அல்லது எல்பிஜி ஐடி அல்லது வாடிக்கையாளர் எண்ணை உள்ளிடவும்.
4. இந்தத் தகவலை நிரப்பிய பிறகு, Proceed ந்ன்னும் பொத்தானை அழுத்துவதன் மூலம் பணம் செலுத்தலாம்.
ALSO READ: 7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு 'பண்டிகை பரிசு'; அதிரடியாக உயரும் சம்பளம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR